திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1256 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1256பெரிய திருமொழி || (4-1–போதலர்ந்த) (திருத்தேவனார் தொகை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மனோஹாரியான சேஷ்டிதத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம்) 9
கும்ப மிகுமத யானை பாகனோடும் குலைந்து வீழக் கொம்பதனைப் பறித்து எறிந்த கூத்தன் அமர்ந்தது உறையும் இடம் வம்பவிழும் செண்பகத்தின் மணம் கமழும் நாங்கை தன்னுள் செம்பொன் மதிள் பொழில் புடை சூழ் திருத் தேவனார் தொகையே –4-1-9
பதவுரை Show / Hide
மிக கும்பம் மதம் யானை, Miga Kumbam Matham Yaanai - பெருத்த மத்தகத்தையுடைய (குவலயா பீடமென்கிற) மதயானையானது (- (அமர்ந்து உறையும் இடம்;) (நாங்கை தன்னுள்;) (திருத்தேவனார் தொகையே.))
பாகனொடும் குலைந்து வீழ, Bhaganodum Kulainthu Veela - தனது பாகனோடுகூட பங்கப்பட்டு பழியும்படியாக
அதன் கொம்பை, Adhan Kombai - அவ்யானையின் தந்தத்தை
பறித்து எறிந்த, Parithu Erindha - பிடுங்கிப் பொகட்ட
கூத்தன், Kooththan - திவ்ய சேஷ்டிதங்களையுடைய பெருமான்
வம்பு அவிழும் செண்பகத்தின் மணம் கமழும், Vambu Avizhum Senbagaththin Manam Kamazhum - அப்போதலர்ந்த செண்பகப் பூவிமுடைய வாஸனை வீசப்பெற்ற
செம்பொன் மதிள் பொழில் புடை சூழ், Sembon Mathil Pozhil Pudai Soozh - செவ்விய பொன்னால் செய்யப்பட்ட திருமதில்களும் சோலைகளும் சுற்றிலும் சூழ்ந்திருக்கப் பெற்ற