திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1262 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1262பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இதர சமாஸ்ரயணம் பண்ணின பாணன் உடைய ஆயிரம் தோளையும் தரித்தவன் இன்னும் ஆஸ்ரித விரோதிகளை போக்குகைக்கு ஈடாக வந்து வர்த்திக்கிற தேசம்) 5
சாடு போய் விழத் தாழ் நிமிர்த்து ஈசன் தன் படை யோடும் கிளையோடும் ஓட வாணனை யாயிரம் தோள்களும் துணித்தவன் உறை கோயில் ஆடுவான் கொடி யகல் விசும்பு அணைவிப் போய் பகலவன் ஒளி மறைக்கும் மாட மாளிகை சூழ் தரு திரு நாங்கூர் வண் புருடோத்தமமே –4-2-5
பதவுரை Show / Hide
சாடு கோய் விழ, Saadu Koyi Vizha - (அஸுரனால் ஆவேசிக்கப்பட்ட) சகடமானது விழுந்தொழியும்படி (- (உறை கோயில்;) (வண்புருடோத்தமம்))
தாள் நிமிர்த்து, Thaal Nimirththu - திருவடிகளைத் தூக்கினவனாயும்
ஈசன் தன் படையோடும் கிளையோடும் ஓட, Eesan Than Padaiyodum Kilaidodum Oda - ருத்ரன் தனது ஸேனைகயோடும் சுற்றத்தாரோடும் தோற்று ஓடிப்போகும் படியானவளவில்
வாணனை, Vaananai - பாணாஸுரனை
ஆயிரம் தோள்களும், Aayiram Thoalkalum - ஆயிரந் தோள்கயையும்
துணித்தவன், Thuniththavan - அறுத்தொழித்தவனாயுமுள்ள பெருமான்
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவி போய், Aadu Vaan Kodi Akal Visumbu Anavi Poi - அசையாநின்ற பெரிய த்வஜங்கள் பரந்த ஆகாசத்தைத் தழுவி உயரக்கிளம்பி
பகலவன் ஒளி மறைக்கும், Pagalavan Oli Maraikkum - ஸூர்யனுடைய பிரதாபத்தை மறையச்செய்யப்பெற்ற
மாடம் மாளிகை சூழ்தரு நாங்கூர், Maadam Maaligai Soozhdharu Naangoor - மாடங்களினாலும் மாளிகைகளினாலும் சூழப்பட்ட திருநாங்கூரில்