திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1267 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1267பெரிய திருமொழி || (4-2–கம்பாமா) (திருவண் புருடோத்தம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அருள் மாரி-ஆஸ்ரிதருக்கு பிரசாதம் பண்ணும் இடத்தில் மேகம் போலே உதாரரான ஸ்ரீ ஆழ்வார் பண்ணிலே ஆரும்படியாக பாடிய இப்பாடல் இப் பத்தையும் வல்லவர்கள் லோகத்திலே நிரவதிகமான ஆனந்தத்தை உடையராய்-அநந்தரம் நிரவதிக ப்ரீதி உக்தரான ஸ்ரீ நித்ய சூரிகளோடு ஒரு கோவையாக பெறுவர்) 10
மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் வண் புருடோத்தமத்துள் அண்ணல் சேவடிக் கீழ் அடைந்து உய்ந்தவன் ஆலிமன் அருள் மாரி பண்ணுளார் தரப் பாடிய பாடல் இப்பத்தும் வல்லார் உலகில் எண்ணிலாத பேரின்பம் உற்று இமையவரோடும் கூடுவரே –4-2-10
பதவுரை Show / Hide
மண்ணுள் ஆர் புகழ் வேதியர் நாங்கூர், Mannul Aar Pugazh Vedhiyar Naangoor - பூமண்டலத்தில் நிறைந்த புகழையுடைய வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரிலுள்ள
வண்புருடோத்தமத்துள், Vanpurudoththama Thul - வண்புருடோத்தம மென்னுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கிற
அண்ணல், Annal - ஸ்வாமியினுடைய
சே அடிக்கீழ் அடைந்து உய்ந்தவன், Sae Adikizh Adayndhu Uyndhavan - திருவடிகளின் கீழே சேர்ந்து உஜ்ஜீவித்தவரும்
ஆலி மன் –, Aali Man - திருவாலி நாட்டுக்குத் தலைவரும்
அருள் மாரி, Arul Maari - கிருபையை வர்ஷிக்கும்மேகமா-யுள்ளவருமான திருமங்கையாழ்வார்
பண்ணுள் ஆர்தர பாடிய பாடல் இப்பத்தும் வல்லார், Pannul Aarthar Paadiya Paadal Ippaththum Vallar - கானத்திலே பொருந்தும்படி பாடின பாசுரமான இத்திருமொழியை ஓதவல்லவர்கள்
உலகில் எண் இலாத பேர் இன்பம் உற்று, Ulagil En Iladha Per Inbam Utrum - இவ்வுலகின்கண் அளவற்ற மஹாநந்தங்களை அநுபவித்து (பிறகு)
இமையவரோடும் கூடுவர், Imayavaro Thum Kooduvar - நித்யஸூரிகளோடும் கூட்டி வாழப் பெறுவர்.