திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1268 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1268பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (லோகத்தில் காட்டிலும் ஐஸ்வர்யம் விஞ்சி இருக்கும் ஆய்த்து அவ் ஊரில் – அது அடைய தோற்றும்படி தர்ச நீயமான மாடங்களை உடைய திரு நாங்கூரில் நன்றான நடுவுள் ஸ்ரீ செம் பொன் செய் கோயிலின் உள்ளே- கார் காலத்திலே வர்ஷ உந்முகமாகமாய்க் கொண்டு அழகிய வடிவை உடைத்ததாய் இருப்பதொரு மேகம் போலே இருககிறவனைக் கண்ணாலே கண்டு அனுபவிக்கப் பெற்று அசந்நேவ-என்னும் நிலை தீர்ந்து சந்தமேனம் -என்கிறபடியே உஜ்ஜீவித்து க்ருதார்த்தன் ஆனேன் -என்கிறார்) 1
பேரணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும் பேரருளாளன் எம்பிரானை வாரணிமுலையாள் மலர் மகளோடு மண் மகளும் உடன் நிற்ப சீரணி மாட நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே காரணி மேகம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேனே –4-3-1
பதவுரை Show / Hide
உலகத்தவர் பேர் அணிந்து, Ulagaththavar Per Anindhu - இவ்வுலகிலுள்ளார் அனைவரும் திருநாம ஸங்கீர்த்தனஞ் செய்துகொண்டு (- (கண்டு கொண்டு ஸேவித்து))
தொழுது ஏத்தும் பேரருளாளன், Thozhuthu Aethum Perarulalan - அடிபணிந்து துதிக்கப்பெற்ற பேரருளாளப் பெருமாளாய்
எம்பிரானை, Embiranaik - எமக்கு ஸ்வாமியாய்
கார் அணிமேகம் நின்றது ஒப்பானை, Kaar Animegam Nindrathu Oppanai - மழைகாலத்தில் உண்டான அழகிய மேகம் நிற்கிறாப் போலுள்ளவனான பெருமானை
சீர் அணிமாடம் நாங்கை நல்நடுவுள், Seer Animaadam Naangkai Nalanaduvul - அழகு பொருந்திய மாடங்களையுடைய திருநாங்கூரில் நட்டநடுவிலே
செம்பொன் செய் கோயிலின் உள்ளே, Sembon Sei Koyilin Ullae - செம்பொன் செய்கோயில் என்னுந் திருப்பதியிலே,
வார் அணி முலையாள், Vaar Ani Mulaiyal - கச்சணிந்த முலையையுடையளான
மலர் மகளோடு, Malar Magalodu - பெரிய பிராட்டியும்
மண் மகளும், Man Magalum - பூமிப்பிராட்டியும்
உடன் நிற்ப, Udan Nirpa - கூடியிருக்க
உய்ந்தொழிந்தேன், Uyndozhindhen - உஜ்ஜீவித்துப்போனேன்