திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1269 | பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழ் திரு மேனி திவ்ய மங்கள விக்ரஹத்தை அனுபவித்து இதில் திவ்ய ஆத்ம ஸ்வரூபம் திவ்ய குண ஸ்வரூபம் அனுபவிக்கிறார்) 2 | பிறப்பொடு மூப்பு ஓன்று இல்லவன் தன்னைப் பேதியா இன்ப வெள்ளத்தை
இறப்பு எதிர் காலக் கழிவும் ஆனானை ஏழு இசையின் சுவை தன்னைச்
சிறப்புடை மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மறைப் பெரும் பொருளை வானவர் கோனைக் கண்டு நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-2 | பதவுரை Show / Hideபிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை, Pirappodu Mooppu Ondru Illavan Thannai - பிறப்பு கிழத்தனம் முதலிய வாகாரங்களொன்று மில்லாதவனாய் (- (கண்டு நான் வாழ்ந்தொழிந்தேன்)) பேதியா இன்பம் வெள்ளத்தை, Paethiya Inbam Vellathai - என்றுமொருபடிப்பட்ட ஆநந்தக்கடலாய் இருப்பவனாய் இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை, Irappu Edhir Kaalam Kazhivum Aananaik - மூன்று காலங்களிலும் உள்ளவனாய் ஏழ் இசையின் சுவைதன்னை, Ezhu Isaiyin Suvaithannai - ஸப்தஸ்வரங்களினுடைய ரஸம்போல் போக்யனாய் மறைபெரு பொருளை, Maraiperu Porulai - வேதங்களிற் சிறந்த பொருளாயிருப்பவனாய் வானவர் கோனை, Vaanavar Konai - நித்யஸூரி நாதனான எம்பெருமானை சிறப்பு உடை மறையோர், Sirappu Udai Maraivor - சிறந்த வைதிகர்கள் வாழ்கிற நாங்கை நல்நடுவுள், Naangkai Nalanaduvul - திருநாங்கூரில் நட்டநடுவிலே செம்பொன்செய்கோயிலின் உள்ளே, Sembonseikoyilin Ullae - செம்பொன்செய்கோயில் என்னும் திருப்பதியிலே |