திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1274 | பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பருவம் நிரம்பாத அளவிலே ஆய்த்து ஈஸ்வரன் செய்ததைச் செய்தது கம்சனை நிரசித்து -ஆஸ்ரித விரோதி போகப் பெற்றோம் -என்று ஸ்ரமஹரமான என்ற வடிவோடு நின்றவனை-கண்டார் கண் குளிரும்படியாக ஓர் அஞ்சன கிரி நின்றாப் போலே நிற்கிறவனை கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே) 7 | வெஞ்சினக் களிறும் வில்லோடு மல்லும் வெகுண்டு இருத்து அடர்த்தவன் தன்னைக்
கஞ்சனைக் காய்ந்த காளை யம்மானைக் கரு முகில் நிறத்தவனைச்
செஞ்சொல் நான் மறையோர் நாங்கை நன்னடுவுள் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானைக் கண்டு கொண்டு அல்லல் தீர்ந்தேனே –4-3-7 | பதவுரை Show / Hideவேம் சினம் களிறு வெகுண்டும், Vaem Sinam Kaliru Vegundum - வெவ்விய கோபத்தை யுடைத்தான (குவலயா பீடமென்னும்) யானையைச் சீறி முடித்தும், (- (நாங்கை ஈன்னடுவுள் செம்பொன்செய் கோயிலின் உள்ளே கண்டுகொண்டு;)) வில் இறுத்து மல்லும்அடர்ந்தவன் தன்னை, Vil Iruththu Mallum Adarnthavan Thannai - (கம்ஸன் பூஜையின் வைத்திருந்த) வில்லை முறித்தும் மல்லர்களையும் முடித்தவனாய் கஞ்சனை காய்ந்த காளை, Kanjanai Kaayndha Kaalai - கம்ஸனைக் கோபித்து முடித்த யுவாவான அம்மானை, Ammaanai - ஸ்வாமியாய் கருமுகில் திரு நிறத்தவனை, Karumugil Thiru Niraithavanai - காளமேகத் திருவுருவனாய் அஞ்சனம் குன்றம் நின்றது ஒப்பானை, Anjanam Kunram Nindrathu Oppaanai - ஒரு மைமலை நின்றது போன்றுள்ளவனான பெருமானை செம் சொல் நாவல் மறையோர், Sem Sol Naaval Maraiyore - அழகிய சொற்களையுடையரான வைதிகர் வாழ்கிற அல்லல் தீர்ந்தேன், Allal Theerndhen - துன்பங்கள் தொலையப் பெற்றேன். |