திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1275 | பெரிய திருமொழி || (4-3–பேரணிந்து) (திருநாங்கூர்ச் செம்பொன் செய்கோயில்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன்னமும் பாணன் போல்வார் விரோதிகள் வந்து முளைக்கில் செய்வது என் என்று மின் விளங்கா நின்றுள்ள சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையில் நித்ய வாசம் பண்ணுகிற வேதைகசமதி கம்யனாய் ஸ்வயம் பிரகாசமான ஸ்வரூபத்தை உடையனாய் உள்ளவனை-பாலோடு சக்கரை சேர்த்து பருகுவாரைப் போலே ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துடன் ஸ்ரீ திருவேம்கடமுடையானை சேர்த்து அனுபவிக்கிறார்) 8 | அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை
மின் திகழ் குடுமி வேங்கடமலை மேல் மேவிய நல் வேத விளக்கைத்
தென் திசை திலதம் அனையவர் நாங்கைச் செம் பொன் செய் கோயிலின் உள்ளே
மன்றது பொலிய மகிழ்ந்து நின்றானை வணங்கி நான் வாழ்ந்து ஒழிந்தேனே –4-3-8 | பதவுரை Show / Hideஅன்றியலாணன் ஆயிரம் தோளும் துணிய, Anriyalanan Aayiram Tholum Thuniy - கோபித்து எதிரிட்ட பாணாஸுரனுடைய ஆயிரந்தோள்களும் அறுத்துவிழும்படி (- (நாங்கை செம்பொன்செய்) (கோயிலின் உள்ளே;) (நான் வணங்கி வாழ்ந்தொழிந்தேன்)) அன்று ஆழி தொட்டானை, Anru Aazhi Thottanai - அக்காலத்தில் திருவாழியைப் பிரயோகித்தவனும் மின்திகழ் குடுமி வேங்கடம் மலை மேல் மேவிய, Minthigazh Kudumi Vengadam Malai Mel Meviy - ஒளிவிளங்கானின்ற சிகரத்தையுடைய திருவேங்கடமலையின் மேல் பொருந்தியிருப்பவனும் வேதம் கல் விளக்கை, Vedham Kal Vilakkai - வேதங்களால் காணக்கூடிய நல்ல விளக்கானவனும், தென்திசை திலதம் அனையவர், Thendhisai Thilatham Anaiyavar - தென்திசைக்குத் திலகம் போன்ற மஹான்கள் வாழ்கிற மன்ற அது பொலிய மகிழ்ந்து நின்றானே, Manra Adhu Poliya Makizhndu Nindraane - ஸ்ரீ வைஷ்ணவகோஷ்டி விளங்கத் திருவுள்ளமுவந்துநிற்பவனுமான பெருமானை |