திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1278 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1278பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பகவத் சரணாரவிந்த திவ்ய பரிமளம் யாதொரு ஜந்துவின் இடத்தில் உண்டாகிறதோ அங்கு சூரிகள் பிரசாதமும் குறைவற உண்டாம்–ஸ்வாபதேசம்- முதலையாலே இடர் பட்ட அளவிலே வந்து உதவிற்று இலன் என்று எனக்கு நான் கடவேனாய் இடர் பட்டேனோ ஒருவர் இல்லாதாப் போலே -இடர் படுவதே -என்று ஆனையை ரஷித்த கண்ணர் கிடீர்) 1
மாற்றரசர் மணி முடியும் திறலும் தேசும் மற்றவர்தம் காதலிமார் குழையும் தந்தை கால் தளையும் உடன் கழல வந்து தோன்றிக் கத நாகம் காத்தளித்த கண்ணர் கண்டீர் நூற்று இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த பள்ளத்து இளம்கமுகின் முது பாளை பகுவாய் நண்டின் சேற்றளையில் வெண் முத்தம் சிந்து நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண்மாலே –4-4-1
பதவுரை Show / Hide
பள்ளத்து, Pallaththu - தாழ்ந்த நிலத்தில் முளைத்துள்ள
நூறு இதழ் கொள் அரவிந்தம் நுழைந்த, Nooru Idazh Kol Aravindham Nuzhaindha - பல இதழ்களையுடைய தாமரைப் பூவிலே பிரவேசித்த
பகு வாய் நண்டின், Pagu Vaai Nandin - விரிந்தவாயை யுடைத்தான நண்டினுடைய
சேறு அளையில், Seru Alaiyil - சேறுமிக்க விளையிலே
இள கமுகின் முது பாளை, Ila Kamugin Muthu Paalai - இளைய பாக்கு மரங்களினுடைய முற்றின பாளையானது
வெண்முத்தம் சிந்து, Venmuththam Sindhu - வெளுத்த முத்துக்களை இறைக்கப்பெற்ற
நாங்கூர், Naangoor - திருநாங்கூரில்
திருத்தெற்றியம்பலத்து, Thiruththetriyampalathu - திருத்தெற்றியம்பலம் என்னுந் திருப்பதியில் எழுந்தருளியுள்ள
என், En - எனக்கு ஸ்வாமியாய்
செம் கண் மால், Sem Kan Maal - செந்தாமரைக் கண்ணனான ஸர்வேச்வரன் (எப்படிப்பட்டவனென்றால்,)
மாறு அரசர் மணி முடியும் திறலும் தேசும், Maaru Arasar Mani Mudiyum Thiralum Desum - பகைவரான (துரியோதனன் முதலிய) அரசர்களினுடைய மாணிக்கங்களிழைத்த கிரீடங்களும் வலியும் தேஜஸ்ஸும்
அவர்தம் காதலிமார் குழையும், Avardham Kaadhalimaar Kuzhaiyum - அவ்வரசரது மனைவியின் காதணியும்
தந்தை கால்  தளையும், Thandai Kaal Thalaiyum - தன் தகப்பனாரான வஸுதேவருடைய காலிலே இடப்பட்டிருந்த விலங்கும்
உடன் கழல, Udan Kazhala - ஏககாலத்திலே ஒழியும்படியாக
வந்து தோன்றி, Vandhu Thondri - திருவவதரித்தவனாயும்
கதம் நாகம், Kadham Naagam - சீற்றத்தையுடைய கஜேந்திராழ்வானை
காத்து அளித்த, Kaathu Aliththa - ரக்ஷித்தருளினவனாயுமுள்ள
கண்ணர்கண்டீர், Kannarkandheer - கண்ணபிரான் காண்மின்.