திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1280 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1280பெரிய திருமொழி || (4-4–மாற்றரசர்) (திருநாங்கூர்த் திருத்தெற்றியம்பலம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடைச்சிகள் சிறு குடில்களின் வாசலிலே படலைத் திருக்கி வைத்துப் போனால் படலை திறந்து நுழைந்து புக்கு-அன்று கடைந்த வெண்ணெய் செவ்வி அழியாமல் அமுது செய்கைக்காக- இவனுக்கு நுழைந்து புகுகை யாகை இறே குடிலின் உடைய பெருமை) 3
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்து புக்குப் பசு வெண்ணெய் பதமாரப் பண்ணை முற்றும் அடல் அடர்த்த வேற்கணார் தோக்கை பற்றி அலந்தலைமை செய்து உழலும் ஐயன் கண்டீர் மடலெடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டா வரு நீர்ப் பொன்னி திடலெடுத்து மலர் சுமந்து அங்கு இழியும் நாங்கூர் திருத் தெற்றி அம்பலத்து என் செங்கண் மாலே –4-4-3
பதவுரை Show / Hide
மடல் எடுத்த நெடு தெங்கின, Madal Edutha Nedu Thengin - பாளைகள் மிகவும் நிறைந்து உயர்ந்துள்ள தென்னை மரங்களினின்று, (- (நாங்கூர், திருத்தெற்றியம்பலத்து என் செங்கண் மால்;))
பழங்கள், Pazhangal - காய்கள்
வீழ, Veela - (மாமங்களின் மீது) விழ அதனால் உதிர்ந்த
மாங்கனிகள் திரட்டு, Manganihal Thirattu - மாம்பழத் திரள்களை
உருட்டா மலர் சுமந்துவரும் நீர் பொன்னி, Urutta Malai Sumandhuvarum Neer Ponni - உருட்டிக்கொண்டும் (பல வகைப்) பூக்களையடித்துக் கொண்டும் பெருகுகின்ற பிரவாஹத்தையுடைய காவேரியானது
திடல் எடுத்து, Thidal Eduthu - மேட்டு நிலங்களை யெடுத்துவிட்டு
இழியும், Izhiyum - வெள்ளமிடப்பெற்ற
பசு வெண்ணெய் பதம் ஆர, Pasu Vennai Padham Aara - அப்போது கடைந்து வைத்த வெண்ணெயை அமுது செய்வதற்காக
படல் அடைத்த சிறு குரம்பை நுழைந்துபுக்கு, Padal Adaitha Siru Kurambai Nuzhaindupukku - படலிட்டு மூடிவைத்த சிறு குடில்களிலே நுழைந்து உள்ளேபோய்
அடல் அடர்த்த வேல்கண்ணார், Adal Adaritha Velkannaar - போர்செய்வதற்குரிய வேற்படைபோன்ற கண்களையுடையரான இடைச்சிகளினுடைய
தோக்கை, Thokkai - சேலைத் தலைப்பை
பற்றி, Patri - பிடித்திழுத்து
அலந்தலைமை செய்து, Alandhalamai Seythu - துன்பமான சேஷ்டைகளைப் பண்ணி
பண்ணை முற்றும் உழலும், Pannai Mutrum Uzhalum - இடைச்சேரி யெங்குந் திரிகின்ற
ஐயன் கண்டீர், Aiyan Kandeer - மஹாநுபாவன் காண்மின்