திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1288 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலையை ஏந்தி பரிஹரிக்கப் போகாத மழையைக் காத்த என் ஸ்ரீ ஸ்வாமி) 1 | தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்தருளி மன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடு மழை காத்த எந்தை
பூம் புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் வரண்ட வெங்கும்
தேம பொழில் கமழ் நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-1 | பதவுரை Show / Hideதும்புஉடை பனை கை வேழம் துயர் கெடுத்தருளி, Thumbu Udai Panai Kai Vezham Thuyar Kedu Tharuli - துளையையுடைத்தாய் பனை போன்றதான துதிக்கையையுடைய கஜேந்திராழ்வானது துன்பத்தைப் போக்கியருளினவனாயும் (- (எவ்விடத்திலுள்ளானென்னில்);) முன்னு காம்பு உடை குன்றம் ஏந்தி, Munnu Kaambu Udai Kuntram Aendhi - வேரூன்றின மூங்கில்களை உடைத்தான கோவர்த்தன மலையைக் (குடையாக) எடுத்துப்பிடித்து கடு மழை காத்த எந்தை, Kadu Mazhai Kaatha Endhai - கடிதான மழையைத் தடுத்தவனாயுமுள்ள எம்பெருமான், பூ புனல் பொன்னி, Poo Punal Ponni - அழகியஜலத்தையுடைத்தான காவேரியானது முற்றும் புகுந்து, Mutrum Pugundhu - எங்கும் பாய்ந்து பொன், Pon - பொற்குவியல்களை வரண்ட, Varanda - கொண்டுவந்து தள்ளப்பெற்றதும் எங்கும், Engum - கண்டவிடமெங்கும் தேம் பொழில் கமழும், Them Pozhil Kamazhum - தேன்மிக்க சோலைகள் பரிமளம் வீசப்பெற்றதுமான நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் திருமணிக் கூடத்தான், Thirumanik Koodaththaan - திருமணிக்கூடமென்னும் திருப்பதியிலுள்ளான். |