திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1290 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேக்கள் உடைய வியாபாரத்தை மணல் கொட்டகம் அழிக்குமா போலே அழித்து ஸ்ரீ நப்பின்னை பிராட்டியார் உடைய செவ்வியை உடைத்தான தோள்களோடு புணர்ந்த என் ஸ்ரீ ஸ்வாமி- அவ் ஊரில் உள்ளாருக்கு அத்யயனமும் அனுஷ்டானமும் யாத்ரையாய் இருக்குமா போலே யாய்த்து அவனுக்கு விரோதி நிரசனம் யாத்ரையாய் இருக்கும் படி) 3 | மாத் தொழில் மடங்கச் செற்று மருதிற நடந்தவன் தாள்
சேத் தொழில் சிதைத்துப் பின்னை செவ்வித் தோள் புணைந்த வெந்தை
நாத் தொழில் மறை வல்லார்கள் நயந்தறம் பயந்த வண்கைத்
தீத் தொழில் பயிலு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-3 | பதவுரை Show / Hideமா தொழில் மடங்க செற்று, Maa Thozhil Madanga Settru - குதிரை வடிவுகொண்டு வந்த கேசியென்னும் அஸுரனுடைய (பராக்ரமச்) செயல்களெல்லாம் அடங்கும்படி செய்து (அவ்வஸுரனை) கொன்றொழித்தவனாயும் (- (எங்குள்ளானென்னில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) மருது இற நடந்து, Maruthu Ira Nadandhu - மருதமரங்கள் இற்றுமுடிந்து விழும்படி தவழ்நடை கற்றவனாயும் வல் தாள் சே தொழில் சிதைத்து, Val Thaal Se Thozhil Sithaithu - வலிய கால்களையுடைய (ஏழு) ரிஷபங்களினுடைய வியாபாரத்தை பங்கப்படுத்தி பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டியினுடைய செவ்வி தோள், Sevvi Thol - அழகிய தோள்களோடே புணர்ந்த, Punarndha - கலவி செய்தவனாயுமுள்ள எந்தை, Endhai - எம்பெருமான் நா தொழில் மறை வல்லார்கள், Naa Thozhil Marai Vallarhal - நாவுக்கு வியாபாரமான வேதங்களைக் கற்று வல்லவர்கள் நயந்து அறம் பயந்த, Nayandhu Aram Payandha - ஆசையோடே தருமங்களை யனுஷ்டித்த வண் கை தி தொழில் பயிலும், Van Kai Thi Thozhil Payilum - உதாரமான கைகளாலே அக்நி காரியங்களை இடை விடாது செய்யப்பெற்ற |