திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1292 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏறிட்டுக் கொடு வந்த துர்மானத்தைப் போக்கி தானான படியே யாக்கி விட்ட படி அவளுடைய செவியையும் மூக்கையும் வாளாலே அறுத்த என் ஸ்வாமி – ஸ்ரீ பூமிப் பிராட்டியாரும் ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் நித்ய வாசம் பண்ணா நின்றுள்ள ஸ்ரீ திரு நாங்கூர்) 5 | கருமகள் இலங்கையாட்டி பிலம் கொள் வாய் திறந்து தன் மேல்
வருமவள் செவியும் மூக்கும் வாளினால் தடித்த வெந்தை
பெருமகள் பேதை மங்கை தன்னொடும் பிரிவிலாத
திருமகள் மருவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-5 | பதவுரை Show / Hideகருமகள், Karumagal - சண்டாள ஸ்த்ரிபோல் மிகவும் தண்ணியளாய் (- (எவ்விடத்திலுள்ளானெனில்,) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) இலங்கை யாட்டி, Ilankai Yaatti - லங்காபுரிக்கு அதிகாரம் செலுத்துமவளாய் பிலம் கொள் வாய்த் திறந்து தன்மேல் வருமவள், Pillam Kol Vayth Thirandhu Thanmel Varumaval - குஹைபோன்ற வாயைத் திறந்துகொண்டு தன்மேல் வந்தவளான சூர்ப்பணகையினுடைய செவியும் மூக்கும், Seviyum Mookkum - காதையும் மூக்கையும் வாளினால் தடிந்த எந்தை, Vaalinaal Thadindha Endhai - வாட்படையனால் அறுத்தொழிந்த ஸ்வாமி பெரு மகள், Peru Magal - பெருமைதாங்கிய ஸ்த்ரியாயும் பேதை, Pethai - (அடியாருடைய குற்றங்களை அறியாதவளாயுமிருக்கிற மங்கை, Mangai - பூமிப்பிராட்டியும் திரு மகள், Thiru Magal - பெரிய பிராட்டியும் தன்னொடும் பிரிவு இலாத, Thannodum Pirivu Iladha - தன்னைவிட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரியாதவர்களாய் மருவும், Maruvum - பொருந்தியிருக்கப்பெற்ற |