திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1294 | பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பரார்தமான பதார்த்தங்களுக்கு நியந்தாவான ஸ்ரீ சர்வேஸ்வரன் இங்கே வந்து வர்த்தியா நின்றான்-என்கிறார்) 7 | குன்றமும் வானும் மண்ணும் குளிர் புனல் திங்களோடு
நின்ற வெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாய வெந்தை
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும்
தென்றல் வந்துலவு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-7 | பதவுரை Show / Hideகுன்றமும், Kundramum - மலைகளும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்;) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்)) வானும், Vaanum - ஆகாசமும் மண்ணும், Mannum - பூமியும் குளிர் புனல், Kulir Punal - குளிர்ச்சியே இயற்கையான நீரும் திங்களோடு, Thingalodu - சந்திரனும் நின்ற, Nindra - நிலைநின்ற வெம் சுடரும், Vem Sudarum - ஸூர்யனும் அல்லா நிலைகளும், Allaa Nilaihalum - மற்றுமுள்ள நக்ஷத்ராதி ஸ்திதியும் ஆய, Aaya - தானேயாயிருக்கப்பெற்ற எந்தை, Endhai - எம்பெருமான் மன்றமும், Manramum - பெரிய வீதிகளும் வயலும், Vayalum - கழனிகளும் காவும், Kaavum - தோட்டங்களும் மாடமும், Maadum - மாட மாளிகைகளும் ஆகிய எங்கும், Engum - எல்லாவிடங்களிலும் தென்றல், Thendral - தென்றல் காற்றானது மணம் கொண்டு, Manam Kondo - பரிமளத்தை வீசிக்கொண்டு வந்து உலவும், Vandhu Ulavum - ஸஞ்சரிக்கப்பெற்ற |