திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1295 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1295பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (த்யாஜ்யமாயும் உபாதேயமாயும் பௌதிகமாயும் உள்ள பதார்த்தங்களுக்கு நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நின்றான் என்கிறார்) 8
சங்கையும் துணிவும் பொய்யும் மெய்யும் இத்தரணி ஓம்பும் பொங்கிய முகிலும் அல்லாப் பொருள்களுமாய வெந்தை பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாயச் செங்கயல் உகளு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-8
பதவுரை Show / Hide
சங்கையும், Sangaiyum - ஸந்தேஹமும் (- (எவ்விடத்திலுள்ளானெனில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
துணிவும், Thunivum - நிச்சயமும்
பொய்யும், Poyyum - அஸத்யமும்
மெய்யும், Meiyyum - ஸத்யமும்
இத் தரணி ஓம்பும், Ith Tharani Oombum - இப்பூமண்டலத்தை ரக்ஷிக்கின்ற
பொங்கிய முகிலும், Pongiya Mukilum - பரம்பின மேகங்களும்
எல்லா பொருள்களும், Ella Porulkalum - மற்றுமுள்ள வஸ்துக்களும்
ஆய, Aaya - தானேயாயிருக்கப்பெற்ற
எந்தை, Endhai - எம்பெருமான்
பங்கயம் உகுத்த தேறல் பருகிய வாளை பாய, Pangayam Ukutha Therhal Parugiya Vaalai Paaya - தாமரைப் பூவானது வெளிப்படுத்தின மகரந்தத்தை பானம்பண்ணின வாளை மீன்கள் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து விளையாட
செம் கயல், Sem Kayal - சிவந்த கயல் மீன்கள்
உகளும், Ugalum - (அவற்றுக்கு அஞ்சித்) துள்ளுமிடமான