திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1296 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1296பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நிஷித்த அனுஷ்டானம் -விஹித அனுஷ்டானம்-மோஷம்-மோஷத்துக்கு உபயோகியான ஆத்ம குணங்கள் அதுக்கு விரோதியான அநாத்ம குணங்கள்-இவற்றுக்கு எல்லாம் நியந்தா வானவன் இங்கே வந்து வர்த்தியா நிற்கிறான் என்கிறார்) 9
பாவமும் அறமும் வீடும் இன்பமும் துன்பமும் தானும் கோவமும் அருளும் அல்லாக் குணங்களும் ஆய வெந்தை மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என முனிவரோடு தேவர் வந்து இறைஞ்சு நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானே –4-5-9
பதவுரை Show / Hide
பாவமும், Paavamum - பாபமும் (- (எவ்விடத்திலுள்ளானென்னில்) (நாங்கூர், திருமணிக்கூடத்தான்))
அறமும், Aramum - புண்யமும்
வீடும், Veedum - மோக்ஷமும்
இன்பமும், Inbamum - ஸுகமும்
துன்பம் தானும், Thunbam Thaanum - துக்கமும்
கோவமும், Kovamum - கோபமும்
அருளும், Arulum - அநுக்ரஹமும்
அல்லா குணங்களும், Allaa Gunangalum - மற்றுமுள்ள ஸத்வம் முதலிய குணங்களும்
ஆய, Aaya - தானேயாயிருக்கிற
எந்தை, Endhai - எம்பெருமான்
மூவரில் எங்கள் மூர்த்தி இவன் என, Mooviril Engal Moorthi Ivan Ena - ‘ப்ரஹ்ம விஷ்ணு’ ருத்ரர்களாகிற மூன்று மூர்த்திகளுள் நாங்கள் ஆச்ரயிக்கத்தக்க மூர்த்தி இந்த விஷ்ணுவே’ என்று தெளிந்து
முனிவரோடு தேவர், Munivaroatu Thevar - மஹர்ஷிகளும் தேவதைகளும்
வந்து இறைஞ்சும், Vandu Irainchum - வந்து வணங்குமிடமான