திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1297 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1297பெரிய திருமொழி || (4-5–தூம்புடைப) (திருநாங்கூர்த் திருமணிக்கூடம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தை வல்லவர்கள் கடல் சூழ்ந்த பூமியை ஆண்டு ஸ்வர்க்கத்தை நிர்வஹித்து அதுக்கு மேலே ஆதித்ய மண்டலத்தின் நடுவிட்டு ஸ்ரீ அர்ச்சிராதி மார்க்கமே போய் பரமபதத்திலே சென்று ஸ்வ ஸ்வரூபத்தை பெற்று உஜ்ஜ்வலராவர் சர்வ நிர்வாஹகன் -சர்வ அபேஷித ப்ரதன் -விரோதி நிரசன சீலன்-விரோதி நிவ்ருத்த பூர்வக பல ப்ரதத்வம் அதிகாரிகள் பேதம் பற்ற அருளிச் செய்கிறார்) 10
திங்கள் தோய் மாட நாங்கூர்த் திரு மணிக் கூடத்தானை மங்கையர் தலைவன் வண்டார் கலியன் வாயொலிகள் வல்லார் பொங்கு நீருலகம் ஆண்டு பொன்னுலகு ஆண்டு பின்னும் வெங்கதிர்ப் பருதி வட்டத்தூடு போய் விளங்குவாரே –4-5-10
பதவுரை Show / Hide
திங்கள் தோய் மாடம் நாங்கூர், Thingal Thoi Maadam Naangoor - சந்திர மண்டலத்திலே போய்ப் படிந்திருக்கிற மாடங்களையுடைய திருநாங்கூரிலுள்ள
திருமணிக் கூடத்தானை, Thirumanik Koodaththanai - திருமணிக்கூடமென்னுந் திருப்பதியிலெழுந்தருளியுள்ள எம்பெருமான் விஷயமாக,
மங்கையர் தலைவன், Mangaiyar Thalaivan - திருமங்கையிலுள்ளார்க்குத் தலைவரும்
வண் தார், Van Thaar - அழகிய மாலையை யணிந்தவருமான
கலியன், Kaliyan - ஆழ்வார்
வாய், Vaai - திருவாய்மலர்ந்தருளிய
ஒலிகள், Oligal - இப்பாசுரங்களை
வல்லார், Vallar - ஓதவல்லவர்கள்,
பொங்கு நீர் உலகம் ஆண்டு, Pongu Neer Ulagam Aandu - கடல் சூழ்ந்த இவ்வுலகை அரசாட்சி புரிந்து (அதன் பிறகு)
பொன் உலகு ஆண்டு, Pon Ulagu Aandu - ஸ்வர்க்கலோகத்தை அனுபவித்து
பின்னும், Pinnum - அதற்குமேலும்
வெம் கதிர் பரிதி வட்டத்தூடு போய், Vem Kadhir Paridhi Vattathoodu Poi - வெவ்விய கிரணங்களையுடையனான ஸூர்யனுடைய மண்டலத்தின் வழியேசென்று
விளங்குவார், Vilanguvaar - (பரமபதத்தில்) வாழப்பெறுவர்.