திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1300 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1300பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உனக்கு முடி தந்த ப்ரஹ்மாதிகள் உடைய ஐஸ்வர்யம் போல் அன்றிக்கே ஊற்று மாறாத சம்பத்து உடையவன் சுக்ரீவன் ஆகையாலே காண் அவன் முடி பெற்றது) 3
உருத்தெழு வாலி மார்வில் ஒரு கணை யுருவ வோட்டிக் கருத்துடைத் தம்பிக்கு இன்பக் கதிர்முடி யரசளித்தாய் பருத்தெழு பலவும் மாவும் பழம் விழுந்து ஒழுகு நாங்கைக் கருத்தனே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-3
பதவுரை Show / Hide
உருத்து எழு வாலி மார்பில் உருவ, Uruthu Ezhuthu Vaali Maarbil Uruva - கோபங்கொண்டு கிளம்பி வந்த வாலியினுடைய மார்பிலே தைக்கும்படி (- (காவளந்தண்பாடியாய்!;) (நீயே களை கண்))
ஒரு கணை ஒட்டி, Oru Kanai Otti - ஒரு பாணத்தைப் பிரயோகித்து (அவனைக் கொன்று)
கருத்து உடை தம்பிக்கு, Karuthu Udai Thambikku - தன் திருவுள்ளத்திற்குப் பொருந்தினவனான ஸுக்ரிவனுக்கு
இன்பம் கதிர் முடி அரசு அளித்தாய், Inbam Kathir Mudi Arasu Aliththaa - ஆனந்தகரமான ஒளிபொருந்திய கிரீடத்தையும் ராஜ்யத்தையும் கிருபைபண்ணினவனே!,
பருத்து எழு பலவும் மாவும் பழம், Paruthu Ezhuthu Palavum Maavum Pazham - பருமனாய்க்கொண்டு முளைக்கின்ற பலாமரங்களினுடையவும் மாமரங்களினுடையவும் பழங்களானவை
விழுந்து ஒழுகும் நாங்கை, Vizhundhu Ozhugum Naangkai - கீழேவிழுந்து தேன் வெள்ளமிடா நிற்கப்பெற்ற திருநாங்கூரிலுள்ள
கருத்தனே, Karuththanae - எல்லாவற்றுக்கும் கர்த்தாவாயிருப்பவனே!