திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1302 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1302பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித சம்ரஷணத்துக்கும் அநாஸ்ரித சம்ஹாரத்துக்கும் உறுப்பாக ஸ்ரீ பிராட்டியோடே நித்ய சம்ச்லேஷமாய் செல்லா நிற்கும் கடவுள் என்று பர தேவதை என்ற படியாய் சர்வாதிகனான நீயே சந்நிஹிதனாய் இருக்க நான் வேறு ஒருவரைத் தேடித் போகவோ) 5
பட வரவுச்சி தன்னில் பாய்ந்து பன்னடங்கள் செய்து மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தினானே தடவரை தங்கு மாடத் தகு புகழ் நாங்கை மேய கடவுளே காவளந்தண் பாடியாய் களை கண் நீயே –4-6-5
பதவுரை Show / Hide
படம் அரசு உச்சி தன் மேல் பாய்ந்து, Padam Arasu Uchi Than Mel Paayndhu - (விரிக்கப்பட்ட) படங்களை யுடையனான காளிய நாகத்தினுடைய முடிமீது குதித்து (- (காவளந்தண்பாடியாய்!;) (கடவுளே ஸர்வாதிகனே!) (நீயே களைகண்))
பல் நடங்கள் செய்து, Pal Nadangal Seidhu - அனேக விதங்களான நர்த்தனங்களைச் செய்தவனாயும்
மடவரல் மங்கை தன்னை, Madarval Mangai Thannai - மடமைக் குணம் வாய்ந்த பெரியபிராட்டியாரை
மார்வகத்து, Marvagathu - திருமார்பிலே
இருத்தினானே, Iruthinane - நித்யமாக வைத்துக்கொண்டவனாயுமிருக்கிற பெருமானே!,
துடவரை மாடம் தங்கு தகு புகழ் நாங்கை மேய, Thudavarai Maadam Thangu Thagu Pugazh Naangkai Maeya - பெரிய மலைகள் போன்ற மாளிகைகள் பொருந்தியதும் தகுதியான புகழையுடையதுமான திருநாங்கூரில் மேவியிருக்கின்ற