திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1304 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1304பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஏதத் விரதம் மம -என்கிறபடியே இத்தை அடைய ரஷிக்கைக்காக காவல் பூண்டு இருக்கிறவனே ரஷிக்கக் கடவதாக ஏறிட்டுக் கொண்டு அசந்நிஹிதனாய் இருக்கை அன்றிக்கே ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே சந்நிஹிதனான நீயே எனக்கு ரஷகனாக வேணும்) 7
மூத்தவருக்கு அரசு வேண்டி முன்பு தூது எழுந்து அருளி மாத்தமர் பாகன் வீழ மதகரி மருப்பு ஒசித்தாய் பூத்தமர் சோலை யோங்கிப் புனல் பரந்து ஒழுகு நாங்கைக் காத்தேன் காவளந்தண் பாடியாய் களை கண்நீயே –4-6-7
பதவுரை Show / Hide
முன்பு, Munbu - முன்பொருகால் (- (நாங்கை, காவளந்தண்பாடியாய்;) (நீயே களைகண்))
மூத்தவற்கு அரசு வேண்டி தூது எழுந்தருளி, Moothavarkku Arasu Vendi Thoodhu Ezhundharuli - பாண்டவர்களில் தலைவனான தருமபுத்திரனுக்கு ராஜ்யமளிக்க விரும்பித் தூது சென்றவனாய்,
மாத்து அமர் பாகன் வீழ மத கரி மருப்பு ஒசித்தாய், Maathu Amar Paagan Veez Madha Kari Maruppu Osiththai - மத்தகத்தின் மீது பொருந்தியிருந்த பாகனானவன் விழுந்து முடியும்படி (குவலயா பீடமென்னும்) மத யானையினுடைய தந்தங்களை முறித் (து அந்த யானையை ஒழித்)தவனே!
பூத்து அமர் சோலை ஓங்கி, Poothu Amar Solai Ongi - புஷ்பித்து (வரிசையாகப்) பொருந்தியிருக்கிற சோலைகளானவை உயர்ந்து வளர்ந்திருக்கப் பெற்றதும்
புனல் பறந்து ஒழுகும், Punal Parandhu Ozhugum - ஜலமானது (அச்சோலைகளைச் சுற்றி) வியாபித்து பாயா நிற்கப்பெற்றதுமான
காத்தனே, Kaaththanae - ரக்ஷகனே!,