திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1305 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1305பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான பூக்களை உடைத்தான பொழிலாலே சூழப் பட்ட இந்த்ரன் ஏற்றின ஸ்ரீ திரு நாங்கூரிலே ஸ்வர்க்கத்தில் உண்டான வேண்டப்பாடு பூமிக்கும் உண்டாக வேணும் என்று அக் கட்டளையாலே இந்த்ரனாலே சமைக்கப் பட்டது ஸ்ரீ திரு நாங்கூர் என்று சொல்லக் கடவது அன்று அப்படி ஸ்ரீ சத்ய பாமை பிராட்டிக்கு உதவினது எல்லாருக்கும் ஒக்க உதவுகைக்காக ஸ்ரீ திருக் காவளம் பாடியிலே வந்து சந்நிஹிதனான நீயே ரஷகனாக வேணும்) 8
ஏவிளம் கன்னிக்காகி இமையவர் கோனைச் செற்று காவளம் கடிது இறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய் பூ வளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே –4-6-8
பதவுரை Show / Hide
இள கன்னிக்கு ஆகி, Ila Kannikku Aagi - இளம்பெண்ணாகிய ஸத்யபாமைப் பிராட்டிக்காக (- (காவளம்பாடி மேய கண்ணனே!) (நீயே களை கண்))
ஏவு இமையவர் கோனை செற்று, Aevu Imaiyavar Konai Settru - யுத்தத்திலே தேவேந்திரனைப் பங்கப்படுத்தி
கடிது கா வளம் இறுத்து, Kadithu Kaa Valam Iruththu - சீக்கிரமாக நந்தவனத்தின் அழகை அழித்து
கற்பகம், Karppagam - கல்பவ்ருக்ஷத்தை
கொண்டு போந்தாய், Kondhu Ponthaai - (த்வாரகையில்) கொண்டு வந்து நட்டவனே!,
பூவளம் பொழில்கள் சூழ்ந்த, Poovalam Pozhilgal Soozhntha - புஷ்பங்களின் வளம்பொருந்திய சோலைகளாலே சூழப்பட்டதாய்
புரந்தரன் செய்த, Purandharan Seitha - இந்திரனால் ஏற்படுத்தப்பட்டதான
நாங்கை, Naangkai - திருநாங்கூரில்