திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1307 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1307பெரிய திருமொழி || (4-6–தாவளந்து) (திருநாங்கூர்க் காவளம்பாடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருக் காவளம் பாடியிலே வந்து நித்ய வாஸம் பண்ணுகிற கிருஷ்ணனை கிருஷ்ண அவதாரம் பர தசையோடு ஒக்கச் சொல்லலாம் படி இறே இங்குத்தை சௌலப்யம் இப்பத்தையும் வல்லவர்-மோஷத்தை பலமாகச் சொல்லில் அதிகாரிகள் கிடையாது -என்று அபிமத சாதனம் என்னவே கற்பர்கள் பின்னை மோஷத்தில் கொடு போய் மூட்டுகிறோம் -என்று-ஐஸ்வர்யத்தை பலமாகச் சொல்லிற்று) 10
மாவளம் பெருகி மன்னு மறையவர் வாழு நாங்கைக் காவளம் பாடி மேய கண்ணனை கலியன் சொன்ன பாவளம் பத்தும் வல்லார் பார்மிசை அரசராகிக் கோவிள மன்னர் தாழக் குடை நிழல் பொலிவர் தாமே –4-6-10
பதவுரை Show / Hide
மா வளம் பெருகி மன்னு மறையலர் வாழும் நாங்கை, Maa Valam Perugi Mannu Maraiyalar Vaalum Naangkai - மிக்க செல்வமானது அபிவிருத்தியடைந்து பொருந்தியிருக்கிற வைதிகர்கள் வாழுமிடமான திருநாங்கூரில்
காவளம்பாடி மேய கண்ணனை, Kavalampadi Mey Kannanai - திருக்காவளம்பாடியில் எழுந்தருளியுள்ள எம்பொருமான் விஷயமாக
கலியன் சொன்ன, Kaliyan Sonna - திருமங்கையாழ்வாரருளிச் செய்த
வளம் பா பத்தும் வல்லார் தாம், Valam Paa Pathum Vallar Thaam - அழகுபொருந்திய இப்பாசுரங்கள் பத்தையும் ஓதவல்லவர்கள்
பார் மிசை அரசர் ஆகி, Paar Misai Arasar Aagi - பூமியிலே, அரசர்களாயிருந்து கொண்டு
கோ இள மனனர் தாழ, Ko Ilamana Thaa - (மற்றுள்ள) ராஜாக்களும் இளவரசர்களும் வணங்குமாறு
குடை நிழல் பொலிவர், Kudai Nizhal Polivar - ஒற்றைக்குடை நிழலில் விளங்கப்பெறுவர்