திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1309 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷணத்துக்கு வளையம் வைத்து இருக்கிறாயே-விச்சேதியாதே சாவதி அன்றிக்கே இருந்துள்ள புகழை உடைய பிராமணர் உடைய ஸ்ரீ திரு நாங்கூர்-அவ் ஊரில் உள்ளார் படி உனக்கு வேண்டாவோ) 2 | கொந்தார் துளவ மலர் கொண்டு அணிவானே
நந்தாத பெரும் புகழ் வேதியர் நாங்கூர்ச்
செந்தாமரை நீர்த் திரு வெள்ளக் குளத்துள்
எந்தாய் அடியேன் இடரைக் களையாயே –4-7-2 | பதவுரை Show / Hideகொந்து ஆர் துவளம் மலர் கொண்டு அணிவானே, Kondhu Aar Thuvazham Malar Kondo Anivane - பூங்கொத்துக்கள் நிறைந்திருக்கிற திருத்துழாய் மலர்களை அணிந்துகொண்டிருக்குமன்னே!, நந்தாத பெரு புகழ் வேதியர் நாங்கூர், Nandhaadha Peru Pugazh Vedhiyar Naangoor - ஒருநாளும் குறையாத பெரிய புகழையுடையரான வைதிகர்கள் வாழ்கிற திருநாங்கூரில், செந்தாமரை நீர், Senthamarai Neer - செந்தாமரைப் பூக்களையுடைய நீர்நிலைகளையுடைத்தான திருவெள்ளக் குளத்துள், Thiruvellak Kulathul - திருவெள்ளக்குளத்தி லெழுந்தருளியிருக்கிற எந்தாய், Endhaai - என் ஸ்வாமியே! அடியேன் இடரை களையாய், Adiyen Idarai Kalaiyai - அடியேனுடைய துன்பங்களை ஒழித்தருளவேணும். |