திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1312 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திருமலையிலே மேவின விளக்கே-தன் ஸ்வரூப ரூப குணங்களுக்கு தானே பிரகாசன் ஆனவனே நீ எதிர் சூழல் புக்குத் திரியா நின்றால்-இறாயாதே -பார்ஸ்வத்தில் ஆம்படி -பாங்காக வருவேன்) 5 | வேடார் திருவேங்கடம் மேய விளக்கே
நாடார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்
சேடார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்தாய்
பாடா வருவேன் வினையாயின பாற்றே –4-7-5 | பதவுரை Show / Hideவேடு ஆர் திருவேங்கடம் மேய, Veedu Aar Thiruvaengadam Maeya - வேடர்கள் மலிந்திருக்கிற திருமலையிலே நித்யவாஸம் பண்ணுகிற விளக்கே, Vilakke - விளக்குப்போன்றவனே! நாடு ஆர் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர், Naadu Aar Pugazh Vedhiyar Manniya Naangoor - நாடெங்கும் நிறைந்த புகழையுடையரான வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில், சேடு ஆர் பொழில் சூழ், Sedu Aar Pozhil Soozh - திரண்டிருக்கின்ற சோலைகளால் சூழப்பட்ட திருவெள்ளக் குளத்தாய், Thiruvellak Kulaththai - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருப்பவனே!, பாடா வருவேன் வினை ஆயின பாற்று, Paadaa Varuveen Vinai Aayina Paatru - (உன்னைப்) பாடிக்கொண்டு வருகின்ற அடியேனுடைய பாவங்களென்று உள்ளவை எல்லாவற்றையும் சிதறவடிக்க வேணும். |