திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1314 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஈஸ்வரத்வ பிடாரால் அன்றிக்கே கையிலே கோலைக் கொண்டு ஜாதி உசிதமான வ்ருத்தியைச் செய்தாய் என்று இடைச் சாதியாக எழுதிக் கொடுத்து இருக்குமத்தாலே என்னை அனன்யார்ஹனாகப் பண்ணினவனே திரு வெள்ளக் குளத்திலே நிற்கிற பெரியோனே என்னால் பொறுக்க ஒண்ணாத பாபத்தை போக்கி அருளாய்) 7 | கோலால் நிரை மேய்த்த எம் கோவலர் கோவே
நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர்
சேலார் வயல் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
மாலே யென வல் வினை தீர்த்து அருளாயே –4-7-7 | பதவுரை Show / Hideகோலால் நிரை மேய்த்த, Kolaal Nirai Meyththa - கோலைக்கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்த எம்கோவலர் கோவே, Emkovalar Kove - எமது கோபால கிருஷ்ணனே! நாலாகிய வேதியர் மன்னிய நாங்கூர், Naalaagiya Vediyar Manniya Naangoor - நாலு வேதங்களையும் வல்லவர்கள் நித்யவாஸம் செய்கிற திருநாங்கூரில் சேல் ஆர் வயல் சூழ், Seyl Aar Vayal Soozh - மீன்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட திருவெள்ளக்குளத்துள், Thiruvellakkulathul - திருவெள்ளக்குளத்தில் எழுந்தருளியிருக்கிற மாலே, Maale - எம்பெருமானே! என் வல்வினை தீர்த்தருளாய், En Valvinai Theertharulai - என்னுடைய கொடிய பாவங்களை போக்கியருள வேணும். |