திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1315 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இடையர் உனது குணங்களில் மண்டி இருக்க-பிராமணர் வேதங்களில் மண்டி இருக்க நான் சம்சாரத்தில் மக்நன் ஆகி நிற்க-அருளாய் -என்கிறார்) 8 | வராக மதாகி யிம்மண்ணை யிடந்தாய்
நாராயணனே நல்ல வேதியர் நாங்கூர்ச்
சீரார் பொழில் சூழ் திரு வெள்ளக் குளத்துள்
ஆராவமுதே யடியேற்கு அருளாயே –4-7-8 | பதவுரை Show / Hideவாராகம் அது ஆகி, Vaaragam Adhu Aagi - மஹாவராஹமாய்த் திருவவதரித்து (- (நாராயணனே!;) (திருவெள்ளக்குளத்துள்;)) இ மண்ணை இடந்தாய், I Mannai Idanthai - இப்பூமியை அண்டபித்தியில் நின்றும் ஒட்டுவிடுவித்தெடுத்தவனே!, நல்ல வேதியர், Nalla Vediyar - விலக்ஷணரான வைதிகர்கள் வாழ்கிற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில் சீர் ஆர் பொழில் சூழ், Seer Aar Pozhil Soozh - சிறந்த சோலைகள் சூழ்ந்த ஆரா அமுதே, Aaraa Amudhe - ஒருநாளும் த்ருப்தி பிறவாத அமிருதம் போன்றவனே! அடியேற்ரு அருளாய், Adiyerru Arulai - அடியேன்மீது கிருபை பண்ணு. |