திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1316 | பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூவிலே பிறந்தவள் பூ அடிக் கொதித்து விரும்பி அணைக்கும் படி மார்வு படைத்தவனே- பரம பதத்தில் நின்றும் வந்து சம்சாரிகள் பக்கலிலே உறைகையாலே தீப்யமாநனாய் இருக்கிறவனே சம்சாரத்தில் வர்த்திக்கிறான் ஐயோ ஐயோ என்று அருள் புரியாயே) 9 | பூவார் திரு மா மகள் புல்கிய மார்பா
நாவார் புகழ் வேதியர் மன்னிய நாங்கூர்த்
தேவா திரு வெள்ளக் குளத்து உறைவானே
ஆவா வடியான் இவன் என்று அருளாயே –4-7-9 | பதவுரை Show / Hideபூ ஆர், Poo Aar - தாமரைப் பூவில் பொருந்திவஹிக்கிற (- (திருவெள்ளக்குளத்து உறைவானே!–;) (என்று திருவுள்ளமிரங்க வேணும்.)) திரு மா மகள், Thiru Maa Magal - பெரிய பிராட்டியார் புல்கிய, Pulkiya - புணர்ந்த மார்பா, Maarbaa - திருமார்பை யுடையவனே!, நா ஆர் புகழ், Naa Aar Pugazh - (உலகத்தாருடைய) நாக்கிலே நிறைந்திருக்கிற கீர்த்தியையுடைய வேதியர், Vediyar - வைதிகர்கள் மன்னிய, Manniya - நித்யவாஸம் பண்ணுகிற நாங்கூர், Naangoor - திருநாங்கூரில், தேவா, Devaa - பெருமானே!, இவன் அடியான், Ivan Adiyan - “இந்த அடியவன் ஆ ஆ என்று அருளாய், Aa Aa Endru Arulai - ஐயோ! ஐயோ!! (ஸம்ஸாரத்தில் நோவு படுகிறானே”) |