திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1317 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1317பெரிய திருமொழி || (4-7–கண்ணார் கடல்) (திருநாங்கூர்த் திருவெள்ளக்குளம்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வல்லவர்கள் நித்ய சூரிகளோடு ஒரு கோவை ஆவர்கள்) 10
நல்லன்புடை வேதியர் மன்னிய நாங்கூர்ச் செல்வன் திரு வெள்ளக் குளத்து உறைவானைக் கல்லின் மலி தோள் கலியன் சொன்ன மாலை வல்லர் யென வல்லவர் வானவர் தாமே — –4-7-10
பதவுரை Show / Hide
நுல் அன்பு உடைவேதியர் மன்னிய நாங்கூர், Nul Anbu Udaivediyar Manniya Nangoor - சிறந்த பக்தியையுடையரான வைதிகர்கள் நித்யவாஸம் பண்ணுகிற திருநாங்கூரில்
திருவெள்ளக் குளத்து உறைவான் செல்வனை, Thiruvellak Kulathu Uraivaan Selvanai - திருவெள்ளக்குள மென்னுந்திருப்பதியிலே எழுந்தருளியிருக்கிற திருமால் விஷயமாக,
கல்லின், Kallin - மலையைக் காட்டிலும்
மலி, Mali - அதிசயித்த வலிவுள்ள
தோள், Thol - புஜங்களை யுடையரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
சொன்ன, Sonna - அருளிச்செய்த
மாலை, Maala - இச் சொல்மாலையை
வல்லர் என வல்லவர் தாம், Vallar En Vallarvar Thaam - ‘இவர்கள் ஸமர்த்தர்கள்’ என்று (அனைவரும்) சொல்லும்படியாக ஓதவல்லவர்கள்
வானவர், Vaanavar - நித்யஸூரிகளோடு சோப்பெறுவர்.
வல்லரென வல்லவர், Vallarena Vallarvar - இவர் பெரிய திருமொழிப் புலவர்’ என்று பிறர் கொண்டாடும்படியாகக் கற்குமவர்கள் என்கை.