திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1328 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேஷிக்கு அதிசயத்தை பண்ணி யாய்த்து இவருக்கு ஸ்வரூப சித்தி- அத்தலைக்கு அதிசயத்தை பண்ணுகையே ஸ்வரூபமாம் படி யாய்த்து ப்ராப்தி இருப்பது – ஸ்ரீ வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ திரு இந்தளூரிலே வந்து சந்நிதி பண்ணின ஸ்வாமி- இவ்வஸ்து உனக்கு சேஷம் -என்னும் இம் முறையை அறிவித்தவனே இன்று இப்படி ஆறி இருக்கிற நீ-முன் தீம்பு செய்து-சம்பந்த ஞானத்தை எனக்கு பிறப்பிப்பான் என் சேஷத்வ ஞானத்தை பிறப்பித்து அருளிற்று அந்த சேஷத்வ அனுரூபமான வ்ருத்தியை என்னைக் கொண்டு அருள வேணும் – சர்வஞ்ஞன் ஆனவனுக்கும் அறிவிக்க வேண்டும்படி இருக்கிறது காணும் க்ரம ப்ராப்தி பற்றாத படியான இவருடைய சௌகுமார்யம்- என் முன்பே நாலடி இட்டு நடந்து காட்டினால்-அக்ரத ப்ரயயௌ ராம -என்கிறபடியே ஸ்ரீ பிராட்டிக்கு இட்ட விருந்து இட வேணும் காணும் இவருக்கு இப்படி நடந்தால் போன உயிர் மீளும்-உறாவின பயிரிலே ஒரு பாட்டம் மழை விழுந்தால் அது ஜீவிக்கச் சொல்ல வேணுமோ) 1 | நும்மைத் தொழுதோம் நுந்தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே
எம்மைக் கடிதாக் கருமம் அருளி யாவா வென்று இரங்கி
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே — –4-9-1 | பதவுரை Show / Hideஇந்தளூரிர், Indhaloorir - திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற எந்தாய், Endhaai - ஸ்வாமியே!. நும்மை தொழுதோம், Nummai Thozhuthom - தேவரீரை ஆச்ரயித்தோம்; நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம், Num Tham Pani Seidhu Irukkum Num Adiyom - உமக்குக் கைங்கரியம் செய்தே ஸத்தை பெற்கூடிய அடியவர்களா யிருக்கின்றோம்-; இம்மைக்கு, Immaikku - இப்பிறவியிலே இன்பம் பெற்றோம், Inbam Pettrom - உம்மைப் பற்றின உணர்வாகிற ஆனந்தத்ததைப் பெற்றிருக்கிறோம்; எம்மை, Emmai - இப்படிப்பட்ட எங்கள் விஷயத்திலே ஆ ஆ என்று அரங்கி, Aa Aa Endru Arangi - ஐயொவென்று திருவுள்ளமிரங்கி கடது ஆ கருமம் அருளி, Kadathu Aa Karumam Aruli - சீக்கிரமாக ஏதேனுமொரு கைங்கரியத்தை நியமித்து நம்மை ஒருகால் காட்டி நடந்தால், Nammai Orukal Kaatti Nadandhaal - தேவரீரை ஒரு தடவையாவது ஸேவை ஸாதிப்பித்து எமது கண்வட்டத்திலே உலாவினால் நாங்கள் உய்யோமே, Naangal Uyyome - நாம் உஜ்ஜீவிக்க மாட்டோமோ?. |