திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1329 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1329பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தர்ச நீயமான ஸ்ரமஹரமான ஸ்ரீ திரு வாலியிலே நித்ய வாஸம் பண்ணி வ்யாமோஹத்தை தெரிவித்தவனே – கள்வன் கொல் என்னும் படி கைப்பிடித்து வ்யாமோஹத்தை அறிவிப்பித்தவனே ஸ்ரீ திருவாலி யானைக் கைப்பிடித்து-ஸ்ரீ திரு நறையூர் நம்பியானை உபாய பூதனாகவும் – திரு இந்தளூரானை சேஷித்வ சம்பந்த ஞானம் அறிவிப்பிதவன் சம்பந்த ஞானத்தை பிறப்பித்த உனக்கு என்னுடைய ஸ்வரூப அனுரூபமான வ்ருத்தி விசேஷத்தை கொள்கை யாகிற இம்மாத்ரம் இத்தனையும் செய்கை பெரிய பணியோ) 2
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவினிய மைந்தா அம் தண் ஆலி மாலே சோலை மழ களிறே நந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ என் எந்தாய் இந்தளூராய் அடியேற்கு இறையும் இரங்காயே –4-9-2
பதவுரை Show / Hide
சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே மருவ இனிய மைந்தா, Sindhai Thannul Neengaadhu Irundha Thiruve Maruva Iniya Maindha - நெஞ்சிலே ஒரு நொடிப்பொழுதும் விட்டுப் பிரியாமலிருக்கிற செல்வமே!
மருவ இனிய மைந்தா, Maruva Iniya Maindha - அநுபவிக்க அநுபவிக்க போக்யனாயிருக்கிற நித்யயுவாவே!,
அம் தண் ஆலி மாலே, Am Than Aali Maale - அழகிய குளிர்ந்த திருவாலி நகர்ப்பெருமானே!,
சோலை மழகளிறே, Solai Mazhagalire - சோலைக்குள்ளே வளர்ந்தஒரு யானைக்குட்டி போன்றவனே!
நந்தா விளக்கின் சுடரே, Nandha Vilakkil Sudare - ஒரு நாளுமணையாதவிளக்குச் சோதிபோல் திகழுமவனே!
நறையூர் நின்ற நம்பீ, Naraiyoor Nindra Nambee - திருநறையூரில் எழுந்தருளியிருக்கிற பரிபூர்ணனே!
இந்தளுராய் என் எந்தாய், Indhaluraai En Endhaai - திருவிந்தளூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானே!
ஆடியேற்கு இறையும் இரங்காயே, Aadiyaerku Irain Irangaiye - அடியேன் விஷயத்தில் சிறிதும் கிருபைசெய்கிற யில்லையே!