திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1334 | பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு ஒரு குற்றம் இல்லையாக வன்றோ-யஸ் சர்வஞ்ஞஸ் சர்வ வித் -இத்யாதி பிரமாணங்கள் சொல்லுகிறது நம்மை சர்வஞ்ஞன் சர்வ சக்தன் என்று பிரமாணங்கள் சொல்லா நிற்க நீர் நமக்கு ஞான சக்திகளில் வைகல்யம் சொல்லுகிறது-என் கொண்டு என்னில் அது ஒரு வ்யக்தியிலே பலிக்கக் கண்டேன் என்கிறார் பருவம் அறிந்து வந்து முகம் காட்டாமையைக் கொண்டு-சர்வஞ்ஞனை அஞனாக உப பாதித்தார் தம் தசைக்கு ஈடாக உதவாமையைக் கொண்டு சர்வ சக்தனை அசக்தனாக உபபாதிக்கிறார்) 7 | மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள வெம்மைப் பணி யறியா
வீட்டீர் இதனை வேறே சொன்னோம் இந்தளூரீரே
காட்டீர் ஆனீர் நுந்தம் அடிக்கள் காட்டில் உமக்கு இந்த
நாட்டே வந்து தொண்டரான நாங்கள் உய்யோமே –4-9-7 | பதவுரை Show / Hideநீர் பணி கொள்ள மாட்டீர் ஆனீர், Neer Pani Koll Maattheer Aanheer - தேவரீர் (எம்மிடத்தில்) கைங்கரியங்கொள்ள விரும்பாதவராயிருக்கின்றீர்; (- (இந்தளூரீர் !–;) (இதெல்லாம் கிடக்கட்டும்:)) எம்மை பணி அறியா விட்டீர், Emmai Pani Ariya Vitteer - அடியோங்களுக்கு சேஷத்வத்தை உணர்த்திவிட்டு கைவிட்டு விட்டீர்; இதனை வேறே சொன்னோம், Idhanai Veerae Sonnom - மேற்சொல்லப்போகிற விஷயத்தை முக்கியமாக விண்ணப்பஞ் செய்கிறோம்; நுந்தம் அடிக்கள் காட்டீர் ஆனீர், Nundham Adikkal Kaattheer Aanheer - தேவரீருடைய திருவடிகளைக் காட்டாமல் போனீர்; காட்டில், Kaattil - காட்டியருளினால், இந்த நாட்டே, Indha Naatte - இந்த நாட்டிலே வந்து, Vandhu - உம்முடைய அடிமைக்கு இசைந்துவந்து உமக்கு தொண்டர் ஆன நாங்கள், Umakku Thondar Aan Naangal - உமக்கு அடிமைப்பட்டவர்களான நாங்கள் உய்யோமே, Uyyoame - உஜ்ஜீவித்துப் போகமாட்டோமோ? |