திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1335 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1335பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேதனர் உகந்ததையே நிறமாகக் கொள்ளும் ஸ்வ பாவரான-நம் பக்கல் உம்முடைய அபேஷிதம் பெற்று போகையிலே குறை உண்டோ – உம்முடைய அபேஷிதம் தன்னைச் சொல்லீர் என்ன –நீ உகந்தார் உகந்த வடிவுகளைக் கொண்டு வந்து அவர்களுக்கு காட்டிக் கொடுத்தாயே யாகிலும்-உன்னுடைய இச்சா க்ருஹீதமான அசாதாரண விக்ரஹத்தை இது காண் இருக்கும் படி -என்று கொடு வந்து எனக்குக் காட்ட வேணும் -என்கிறார்) 8
முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ணம் எண்ணும் கால் பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே — –4-9-8
பதவுரை Show / Hide
வண்ணம் எண்ணுங்கால், Vannam Ennungkaal - தேவரீருடைய திருமேனி நிறத்தை ஆராயுமளவில், (- (இந்தளூரீர்!;))
முன்னை வண்ணம், Munnai Vannam - முதலதான கிருதயுகத்தில் கொண்ட நிறம்
பாலின் வண்ணம், Paalin Vannam - பாலின் நிறமான வெண்மையாயிருக்கும்;
முழுதும் நிலை நின்ற பின்னை வண்ணம், Muzhudhum Nilai Nindra Pinnai Vannam - எப்போதும் நிலைநிற்பதாயும் பிந்தின கலியுகத்திற்கொண்டதாயுமுள்ள நிறம்
கொண்டல் வண்ணம், Kondal Vannam - காளமேகத்தின் நிறமான கருமையாம்;
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி, Ponnin Vannam Maniyin Vannam Puraiyum Thirumeeni - பொன்னிறத்தையும் நிலமணி நிறத்தையு மொத்திருக்கின்ற (தேவரீருடைய திருமேனி)
இன்ன வண்ணம் என்று காட்டீர், Inna Vannam Endru Kaattheer - (கீழ்ச் சொன்ன நிறங்களுள்) இன்ன நிறமுடையதென்று தெரியக் காட்டியருளவேணும்