திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1336 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1336பெரிய திருமொழி || (4-9–நும்மைத் தொழுதோம்) (திருவிந்தளூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சில் பிரகாசத்தை ஒழியவே நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுக்கும் வடிவை அங்கு உள்ளாரோபாதி முழுக்க காட்சி கொடுக்கைக்கு அன்றோ இங்கு வந்து நிற்கிறது) 9
எந்தை தந்தை தம்மான் என்று எமர் ஏழு அளவும் வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால் சிந்தை தன்னுள் முந்தி நிற்றீர் சிறிதும் திருமேனி இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே –4-9-9
பதவுரை Show / Hide
எந்தை தந்தை தம்மான் என்று என்று, Endhai Thandhai Thammaan Endru Endru - என் தகப்பனார் அவர் தகப்பனார் அவர் தகப்பனார் என்கிற முறைமையில் (- (இந்தளூரீர்!;))
எமர் ஏழ் அளவும், Emar Ezh Azhavum - எமது முன்னோர்கள் எழுதலை முறையாக
வந்து நின்ற, Vandhu Nindra - தேவரீருடைய கைங்கரியத்திற்கு இசைந்து வந்திருக்கின்ற
தொண்டரோர்க்கே, Thondarorkke - அடியோங்கள் விஷயத்திலேயே
வாசி வல்லீர், Vaasi Vallir - கணக்குப் பார்க்கின்றீர்;
ஆல், Aal - ஐயோ!;
சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர், Sindhai Thannul Mundi Nitrir - எமது நெஞ்சுக்குள்ளே முற்பட்டுவந்து நிற்கின்றீர்;
திருமேனி இந்த வண்ணம் என்று சிறிதும் காட்டீர், Thirumeni Indha Vannam Endru Siridum Kaatteer - திருமேனியின் நிறம் இன்னதென்று சிறிதேனும் காட்டுகின்றிலீர்