திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1338 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரயநீய வஸ்து சந்நிஹிதமான இடம் என்று தோற்றும்படி யாய்த்து அத்தேசத்தில் போக்யதை இருப்பது எல்லாம் எங்கும் ஒக்க பக்வமாய்த்து அங்கு இருப்பது) 1 | ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒரு கால் ஆலிலை வளர்ந்த எம்பெருமான்
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் பெரு நிலம் அளந்தவன் கோயில்
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்குமாம் பொழில்களின் நடுவே
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென் பால் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-1 | பதவுரை Show / Hideஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு, Aaychiyar Azaippa Vennai Undu - இடைச்சிகள் முறையிடும்படியாக வெண்ணெயை (த்திருடி) அமுதுசெய்தவனாயும் ஒருகால் ஆல் இலை வளர்ந்த, Orukaal Aal Ilai Valarntha - பிரளயகாலமாகிற ஒரு ஸமயத்தில் ஆலந்தளிரில் திருக்கண் வளர்ந்தருளினவனாயும் பேய்ச்சியை முலை உண்டு, Peychchiyai Mulai Undu - பூதனையினுடைய முலைப்பால் உண்டவனாயும் இணை மருது இறுத்து, Inai Maruthu Iruthu - இரட்டை மருதமரங்களை முறிந்துவிழச் செய்தவனாயும் பெரு நிலம் அளந்தவன், Peru Nilam Alandhavan - விசாலமான பூமியை (த்ரிவிக்ரமனாய்) அளந்துகொண்டவனாயுமிருக்கிற எம்பெருமான் கோயில், Emperumaan Koyil - எம்பெருமானுடைய இருப்பிடம் (எதுவென்றால்) காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும், Kaayththa Neel Kamugum Kathaliyum Thengum - காய்கள் நிறைந்து ஓங்கியிருக்கின்ற பாக்குமரங்களும் வாழைமரங்களும் தென்னை மரங்களும் எங்கும் ஆம், Engum Aam - எல்லாவிடங்களிலும் மலிந்திருக்கிற பொழில்களின் நடுவே, Pozhilgalin Nadhuvae - சோலைகளினிடையே வாய்த்த நீர் பாயும், Vaayththa Neer Paayum - போதுமான ஜலம் பாயாநிற்கிற மண்ணியின், Manniyin - மண்ணியாற்றின் தென்பால், Thenpaal - தென்கரையிலுள்ள திருவெள்ளியங்குடி அது, Thiruvelliyangudi Adhu - திருவெள்ளியங்குடியாகிற அத்தலமாம். |