திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1341 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1341பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாதிகள் கூக்குரல் கேட்கும் படியாக அடுத்து அணியாக ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின சர்வாதிகன் வந்து சாய்ந்து அருளின கோயில்) 4
கறவை முன் காத்துக் கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு வுருவன் பறவை முன் உயர்த்துப் பாற் கடல் துயின்ற பரமனார் பள்ளி கொள் கோயில் துறை துறை தோறும் பொன் மணி சிதறும் தொகு திரை மண்ணியின் தென் பால் செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் திரு வெள்ளியங்குடி யதுவே –4-10-4
பதவுரை Show / Hide
முன் கறவை காத்து, Mun Karavai Kaathu - முற்காலத்தில் பசுக்களை ரக்ஷரித்தவனாயும் (- (திருவெள்ளியங்குடி அதுவே–.))
கஞ்சனை காய்ந்த, Kanjanai Kaayndha - கம்ஸனைச் சீறி முடித்தவனாயும்
காள மேகம் திருஉருவன், Kaala Megam Thiruruvan - காளமேகம் போன்ற திருமேனியை யுடையனாயும்
பறவை முன் உயர்த்து, Paravai Mun Uyarndhu - பெரிய திருவடியை முன்னே கொடியாக வெடுத்தவனாயும்
பாற்கடல் துயின்ற, Paarkadal Thuyindra - திருப்பாற் கடலிலே பள்ளி கொள்பவனாயுமிருக்கிற
பரமனார், Paramanaar - ஸர்வேச்வரன்
பள்ளி கொள் கோயில், Palli Kol Koyil - சாய்ந்தருளுமிடம் (எதுவென்றால்)
துறை துறை தோறும் பொன் மணி சிதறும், Thurai Thurai Thoram Pon Mani Sidhirum - எல்லாத் துறைகளிலும் பொன்களையும் மணிகளையும் கொழிக்கின்ற
தொகு திரை, Thogu Thirai - திருண்ட அலைகளை யுடைத்தான
மண்ணியின் தென்பால், Manniyin Thenpaal - மண்ணியாற்றின் தென்கரையிலே,
செறி மணி மாடம் கொடி கதிர் அணவும், Seri Mani Maadam Kodi Kathir Anavum - நெருங்க இழைக்கப்பட்ட மாணிக்கங்களை யுடைத்தான மாட மாளிகைகளிலுள்ள த்வஜங்கள் ஸூர்ய மண்டலத்தை ஸ்பர்சித்திருக்கப்பெற்ற