திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1342 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1342பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கால் ஆஸ்ரிதன் பக்கல் வாத்சல்யத்தாலே சாரத்தியம் பண்ணி அதி ரத மகா ரதரான பீஷ்மாதிகள் தேரை விட்டு ஒடும்படியாக துடர்ந்த –செங்கண் மால் ஆஸ்ரித வாத்சல்யம் அடங்கலும் கண்ணிலே தோற்றும்படி இருப்பானாய்ஆஸ்ரித வ்யாமுக்தன் ஆனவன் வந்து வர்த்திக்கிற தேசம்) 5
பாரினை யுண்டு பாரினை யுமிழ்ந்து பாரதம் கை எறிந்து ஒரு கால் தேரினை யூர்ந்து தேரினைத் துரந்த செங்கண் மால் சென்றுறை கோயில் ஏர் நிறை வயலுள் வாளைகள் மறுகி எமக்கு இடம் அன்று இது என்று எண்ணிச் சீர்மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி யதுவே –4-10-5
பதவுரை Show / Hide
ஒரு கால், Oru Kaal - ஒரு சமயத்தில் (- (மற்றொரு சமயத்தில்) (திருவெள்ளியங்குடி அதுவே))
பாரினை உண்டு, Paarinai Undu - உலகங்களை வயிற்றினுள்ளே அடக்கிவைத்தவனாயும்
பாரினை உமிழ்ந்து, Paarinai Umizhndu - அவ்வுலகங்களை வெளிப்படுத்தினவனாயும்
பாரதம் கையெறிந்து, Bharatham Kaiyerinthu - பாரதயுத்தத்தில் கையுமணியும் வகுத்தவனாயும்
தோரினை ஊர்ந்து, Thoorinai Oorndhu - (அர்ஜுநனுடைய) தேரை நடத்தி
தோரினை துரந்த, Thoorinai Thurandha - (எதிரிகளினுடைய) தேர்களைப் பங்கப்படுத்தினவனாயுமுள்ள
செம் கண் மால், Sem Kan Maal - புண்டரி காக்ஷன்
சென்று உறை கோயில், Sendru Urai Koyil - வந்து நித்யவாஸம் பண்ணுகிற ஸந்நிதி (எதுவென்றால்)
ஏர் நிரை, Aer Nirai - உழுகிற ஏர்களின் வரிசையையுடைய
வயலுள், Vayalul - கழனிகளிலுள்ள
வாளைகள், Vaalaihal - வாளை மீன்கள்
மறுகி, Marugi - அஞ்சி
இது எமக்கு இடம் அன்று என்று எண்ணி, Idhu Emakku Idam Andru Enni - ‘இந்த வயலானது நாம் வஸிக்கத் தக்கதன்று’ என்று நினைத்து
சீர் மலி பொய்கை, Seer Mali Poigai - அழகுமிக்க தடாகங்களிலே
சென்று அணைகின்ற, Sendru Anaikindra - சென்று சேரப்பெற்ற