திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1345 | பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பிராட்டி போல்வாரை ஏறிட்டுக் கொள்ளக் கடவ மடியிலே துஷ் ப்ரக்ருதியான ஹிரண்யனை ஏறிட்டு தன்னுடைய தாள் மேல் கிடாத்தி -என்கிற இடத்துக்கு ஸ்ரீ பட்டர் அருளிச் செய்யநான் கேட்டேன் என்று ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர் பிரதி கூல்யனான ஹிரண்யனை விட்டு ஆசை உடைய என்னை அன்றோ அம்மடியிலே ஏறிட்டுக் கொள்ள அடுப்பது -என்று தம்மைப் பார்த்து அருளிச் செய்தாராக – அவனுடைய பரந்த மார்வை கிழித்துப் பொகட்ட ஆஸ்ரித வ்யாமோஹத்துக்கு அவதி இல்லாதவர் நித்ய வாஸம் பண்ணுகிற தேசம்) 8 | முடியுடை அமரர்க்கு இடர் செய்யும் அசுரர் தம் பெருமானை அன்று அரியாய்
மடியிடை வைத்து மார்வை முன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் பதித்த பன்மணி களின் ஒளியால்
விடி பகல் இரவு என்று அறிவரிதாய திருவெள்ளியங்குடி யதுவே –4-10-8 | பதவுரை Show / Hideமுடி உடை அமரர்க்கு, Mudi Udai Amararukku - கிரீடம் பூண்டிருக்கிற தேவர்களுக்கு (- (மாயனார் மன்னிய கோயில்–.) (திரு வெள்ளியங்குடி அதுவே–.)) இடர் செய்யும், Idar Seyyum - துன்பங்களைச் செய்து கொண்டிருந்த அசுரர்தம் பெருமானை, Asuraratham Perumanai - இரணியாசுரனை முன் அன்று, Mun Andru - முற்காலத்தில் அரி ஆய் மடியிடை வைத்து மார்வைகீண்ட, Ari Aay Madiyidai Vaitthu Marvaikinda - நரசிங்கமாகி மடிமேல் வைத்துக்கொண்டு மார்பைக் கிழித்து முடித்தவனான புடியிடை மாடத்து தூண் அடியிடையில் பதித்த, Pudiyidai Maadathu Thoon Adiyidaiyil Pathitha - பூமியிலே உண்டான மாடங்களில் (நடப்பட்டிருக்கிற) தூணடியிலே அழுத்தியுள்ள பல் மணிகளின் ஒளியால், Pal Manigalil Oliyaal - பலவகைப்பட்ட ரத்னங்களின் ஒளியாலே விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய, Vidi Pakal Iravu Endru Arivu Aridhu Aaya - விடியற்காலமென்றும் பகற்காலமென்றும் இராக்காலமென்றும் அறியக் கூடாமலிருக்கிற |