திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1347 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1347பெரிய திருமொழி || (4-10–ஆய்ச்சியர்) (திருவெள்ளியங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமியை இடந்து திரு எயிற்றினில் கொண்டு அந்த ஸ்ரமம் ஆறும்படியாக கடல் திரைகளில் குருந் திவலைகள் துடை குத்தி உறக்கத் ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளினவன் ஆய்த்து ஸ்ரீ திரு வெள்ளியங்குடியிலே சந்நிஹிதன் ஆனான்) 10
பண்டு முன் ஏனமாகி அன்று ஒரு கால் பார் இடந்து எயிற்றினில் கொண்டு தெண் திரை வருடப் பாற் கடல் துயின்ற திருவெள்ளியங்குடியானை வண்டறை சோலை மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆள்வர் இக் குரை கடல் உலகே –4-10-10
பதவுரை Show / Hide
பண்டு முன் அன்று ஒருகால் எனம் ஆகி பார் இடந்து, Pandhu Mun Andru Orukal Enam Aagi Paar Idandhu - முன்பொருகாலத்தில் வராஹரூபியாய்த் திருவவதரித்துப் பூமியைக் குத்தியெடுத்து
எயிற்றினில் கொண்டு, Eiyirtrinil Konda - கோட்டின் மேற் கொண்டவனும்
தெண் தரை வருட பால் கடல் துயின்ற, Then Tarai Varuda Paal Kadal Thuyindra - தெளிந்த அலைகள் (திருவடிகளின் மேல்) மோதும்படி திருப்பாற்கடலிலே திருக்கண் வளர்ந்தருள்பவனும்
திருவெள்ளியங்குடியானை, Thiruvelliyangudiyanai - திருவெள்ளியங்குடியில் திருக்கோயில் கொண்டிருப்பவனுமான எம்பெருமான் விஷயமாக,
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன், Vandu Arai Solai Mangaiyar Thalaivan - வண்டுகள் முரலும் சோலைகளை யுடைய திருமங்கை காட்டில் உள்ளவர்களுக்கு ஸ்வாமியும்
மானம் வேல், Manam Vel - பெருமை தங்கிய வேற்படையையுடையவருமான
கலியன், Kaliyan - ஆழ்வாருடைய
வாய் ஒலிகள் இவை, Vaai Oligal Ivai - ஸ்ரீஸூக்தியாகிய இத்திருமொழியை
கொண்டு, Kondhu - காலில் கொண்டு
பாடும் தவம் உடையார்கள், Paadum Thavam Udaiyargal - பாடும் பாக்கியமுடையவர்கள்,
குரை கடல் இவ்வுலகு ஆள்வர், Kurai Kadal Ivvalagu Aalvar - கோஷிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தை ஆளப்பெறுவகள்.