திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1348 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1348பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ யத்னத்தாலே அறியப் பார்ப்பாருக்கு என்றும் ஒக்க அறிய அரியதாம் படி இருக்கும் ஸ்வ பாவன் அறிகையும் அறியாது ஒழிகையும் ஆகிற இவ்வர்த்தம் கிடக்க சர்வ லோகேஸ்வரனாக சர்வருக்கும் சம்பிரதி பன்னன் விசேஷித்து என்னை அடிமை கொண்டவன்–அஸ்மத் ஸ்வாமின்) 1
அறிவது அரியான் அனைத்து உலகும் உடையான் என்னை யாளுடையான் குறிய மாண் உருவாகிய கூத்தன் மன்னி யமரும் இடம் நறிய மலர் மேல் சுரும்பார்க்க எழிலார் மஞ்ஞை நடமாடப் பொறி கொள் சிறை வண்டிசை பாடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-1
பதவுரை Show / Hide
அறிவது அரியான், Arivathu Ariyan - (ஒருவர்க்கும் தம் முயற்சியாலே) அறியக் கூடாதவனும்
அனைத்து உலகும் உடையான், Anaiththu Ulagum Udaiyan - எல்லாவுலகங்கட்கும் ஸ்வாமியானவனும்
என்னை ஆள் உடையான், Ennai Aal Udaiyan - அடியேனை அடிமை கொண்டவனும்
குறிய மாணி உரு ஆய, Kuriya Maani Uru Aaya - வாமநப்ரஹ்மசாரி வேஷங்கொண்டவனும்
கூத்தன் (அவ்வேஷத்தோடு மாவலி வேள்வியில் எழுந்தருளும் போது), Kooththan Avvaeshaththodu Maavali Velviyil Ezhundharulum Podhu - விலக்ஷணமான நடையிட்டு எழுந்தருளினவனுமான பெருமான்
மன்னி அமரும் இடம், Manni Amarum Idam - இடைவிடாது நித்யவாஸம் பண்ணுமிடமாவது;-
சுரும்பு நறிய மலர்மேல் ஆர்க்க, Surumbu Nariya Malarmel Aarkka - ‘சுரும்பு’ என்னுஞ் சாதி வண்டுகள் மணம்மிக்க புஷ்பங்களின் மீது (இருந்து கொண்டு) ரீங்காரம் செய்யப்பெற்றதும்
எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட, Ezhil Aar Manjjnai Nadam Aada - அழகுபொருந்திய மயில்கள் கூத்தாடப் பெற்றதும்
பொறி சிறை கொள் வண்டு இசை பாடும், Pori Sirai Kol Vandu Isai Paadum - வரியையும் சிறகையுமுடைய வண்டினங்கள் இசைபாடப் பெற்றதுமான
புள்ளம் பூதக்குடி, Pullam Poodhakudi - திருப்புள்ளம் பூதக்குடியென்னுந் திருப்பதியாம்.