திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1349 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1349பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆலவாய் உடையான் கேட்க ஸ்ரீ பட்டர் அருளிச் செய்தார் என்று நாம் பிரசித்தமாக சொல்லிப் போருமது இறே கயல் உகளா நின்றதாகில்-புள்ளுக்குத் தேடித் போக வேண்டுகிறது என் -என்ன ஸ்ரீ பிள்ளை -அவ்விடம் அறிந்தது இல்லையோ-பிள்ளைக்கு அன்றோ தேடுகிறது நிலமிதியாலே அவை தான் தூணும் துலாமும் போலே வளர்ந்து இருக்கும் அதில் இதுக்கு சாத்மிக்கும் அவை தேடித் போகா நிற்கும்) 2
கள்ளக் குறளாய் மாவலியை வஞ்சித்து உலகம் கைப்படுத்துப் பொள்ளைக் கரைத்த போதகத்தின் துன்பம் தவிர்ந்த புனிதன் இடம் பள்ளச் செறுவில் கயல் உகள பழனக் கழனி யதனுள் போய் புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-2
பதவுரை Show / Hide
கள்ளம் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து, Kallam Kurall Aay Maavaliyai Vanchiththu - கபடமுள்ள வாமந ரூபியாகி மஹாபலியை ஏமாற்றி (- (புள்ளம் பூதங்குடி;–.))
உலகம் கைப்படுத்து, Ulagam Kaipaduthu - ஸகலலோகங்களையும் ஸ்வாதீனப்படுத்திக் கொண்டவனும்
பொள்ளை கரத்த போதகத்தின், Pollai Karathth Podhagatthin - துளைக்கையை யுடைய கஜேந்திரனது
துன்பம் தவிர்த்த, Thunbam Thavirtha - துயரத்தைப் போக்கியருளின
புனிதன், Punithan - பரம பவித்திரனுமான பெருமான் எழுந்தருளியிருக்கின்ற
இடம், Idam - இடமாவது;-
பள்ளம் செறுவில் கயல் உகள, Pallam Seruvil Kayal Ughal - தாழ்ந்திருக்கின்ற கழனிகளில் மீன்களானவை துள்ளித் துள்ளிவிளையாடா நிற்க
புள்ளு, Pullu - பக்ஷரிகளானவை
பழனம் கழனி அதனுள் போய், Pazhanam Kazhani Adhanul Poi - நீர் நிலைகளையுடைய கழனிகளினுள்ளே போய்
பிள்ளைக்கு இரை தேடும், Pillaiyikku Irai Thedum - தம் தம் குட்டிகளுக்கு உணவாகக்கூடிய சிறு மீன்களைத் தேடப்பெற்ற