திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1351 | பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வன்மை மிக்கு திரண்டு இருந்துள்ள தோள்கள் இருபதையும் துணித்த மிடுக்கை உடைத்தான வில்லை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகன் வர்த்திக்கிற தேசம்) 4 | வெற்பால் மாரி பழுதாக்கி விறல் வாள் அரக்கர் தலைவன் தன்
வற்பார் திரள் தோள் ஐ நான்கும் துணித்த வல்வில் ராமனிடம்
கற்பார் புரிசை செய் குன்றம் கவினார் கூடம் மாளிகைகள்
பொற்பார் மாடம் எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-4 | பதவுரை Show / Hideவெற்பால் மாரி பழுது ஆக்கி, Verpaal Maari Pazhuthu Aakki - கோவர்த்தன மலையினால் பெருமழையை (தடுத்து) வீணாக்கினவனும் (- (புள்ளம் பூதங்குடி)) விறல் வாள் அரக்கர் தலைவன் தன், Virhal Vaal Arakkar Thalaivan Than - பலிஷ்ட்டனான இராவணனுடைய வற்பு ஆர் திரள் ஐ நான்கு தோளும் துணித்த, Varpu Aar Thiral Ai Naangu Tholum Thuniththa - திண்மை பொருந்திய திரண்ட இருபது தோள்களையும் அறுத்தொழித்த வல் வில், Val Vil - வலிய சார்ங்கத்தையுடையவனான இராமன் இடம், Iraman Idam - இராமபிரான் வாழுமிடமாவது;- கற்பு ஆர் புரிசை செய் குன்றம், Karpu Aar Purisai Sei Kunram - சிறந்த தேலைப்பாடுகள் பொருந்திய திருமதிள்களாகச் செய்யப்பட்டிருக்கிற மலைகளினாலும் கவின் ஆர் கூடம், Kavin Aar Koodam - அழகிய க்ருஹங்களினாலும் மாளிகைகள், Maaligaihal - மாளிகைகளினாலும் பொற்பு ஆர் மாடம், Porpu Aar Maadam - அழகிய மண்டபங்களினாலும் எழில் ஆரும், Ezhil Aarum - சோபை பொருந்திய |