திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1352 | பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவன் அறியாத தோர் இடம் தேடி வைக்கும் யாய்த்து சாந்துப் பரணியிலே தயிரை வைக்கும் யாய்த்து – ஸ்ரீ நேமி யம் கையனான ஸ்ரீ நாராயணனுக்கு ஒளிக்கப் போமோ பூசும் சாந்து என் நெஞ்சமே -என்னும்படி நெஞ்சுக்கு ஆஸ்ரயமான தம் உடம்பிலே சிநேகத்தையும் போக்யதா புத்தியையும் பண்ணினாலும் அவன் விடாதே தனக்கு ஆக்கிக் கொள்வன் என்னுமது ஸ்புரிக்க -சாந்துப் பரணியிலே -என்கிறார்) 5 | மையார் தடங்கண் கருங்கூந்தல் யாய்ச்சி மறைய வைத்த தயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமி யங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரை கருதிச் செங்கால் நாரை சென்று அணையும்
பொய்யா நாவில் மறை யாளர் புள்ளம் பூதங்குடி தானே –5-1-5 | பதவுரை Show / Hideமை ஆர் தடகண்கரு கூந்தல் ஆய்ச்சி, Mai Ar Thadakankaru Koondhal Aaychchi - மையணிந்த விசாலமான கண்களையுடையவளும் கறுத்த கூந்தலை யுடையவளுமான யசோதைப் பிராட்டி (- (புள்ளம் பூதங்குடி)) மறைய வைத்த தயிர் நெய் ஆர் பால், Marai Vaiththa Thayir Ney Ar Paal - கண் படாதபடி மறைத்து வைத்த தயிரையும் நெய்யையும் குடம் நிறைந்த பாலையும் அமுது செய்த, Amuthu Seidha - (களவு வழியினால்) அமுது செய்த நேமி அம் கை மாயன் இடம், Nemi Am Kai Maayan Idam - ஸுதர்சநஹஸ்தனான மாயோன் எழுந்தருளியிருக்குமிடமாவது;- செம் கால் நாரை, Sem Kaal Naarai - சிவந்த கால்களையுடைய நாரைகள் செய் ஆர், Sei Ar - கழனிகளில் நிறைந்திருக்கிற ஆரல், Aaral - ஆரல் மீன்களை இரை கருதி, Irai Karuthi - ஆஹாரமாகக் கொள்ள நினைத்து சென்று அணையும், Sendru Anaiyum - (அங்கே) சென்று சேரப்பெற்றதும் பொய்யா நாவில் மறை ஆளர், Poyyaa Naavil Marai Aalar - பொய்சொல்லி யறியாத நாக்கிலே வேதங்களைத் தாங்குமவரான அந்தணர் வாழப்பெற்றதுமான) |