திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1353 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1353பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நப்பின்னை பிராட்டிக்காக கரு மாரி பாய்ந்தும் -குளத்தில் இரண்டு குச்சுகள் நடுவே குதிக்கை – அணைய வேணும் யாய்த்து வடிவு அழகு – மாறாத சினத்தை உடைத்தாய் காட்டு காட்டு என்று வருகிற இளைமையை உடைத்தான ருஷபங்கள் ஏழையும் ஊட்டியாக நெரித்த பரம பிரணயி யானவன் வர்த்திக்கிற தேசம்) 6
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேயேய் தடந்தோள் மெல்லியற்காய் மன்னு சினத்த மழம் விடைகள் ஏழு அன்று அடர்த்த மாலதிடம் மன்னு முதுநீர் அரவிந்த மலர் மேல் வரி வண்டு இசை பாட புன்னை பொன்னேய் தாது உதிர்க்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-6
பதவுரை Show / Hide
மின்னின் அன்ன நுண் மருங்குல், Minnin Annan Nun Marungul - மின்னலோடு ஒத்த நுட்பமான இடையை யுடையவளும் (- (புள்ளம் பூதங்குடி))
வேய் ஏய் தட தோள், Veiy Aey Thada Thol - மூங்கில் போன்று பருத்த தோள்களை யுடையவளுமான
மெல்லியற்கா, Melliyarkka - இளம்பெண்ணாகிய நப்பின்னைப் பிராட்டிக்காக
அன்று, Andru - முன்பொரு காலத்தில்
மன்னு சினந்த ஏழ் மழ விடைகள், Mannu Sinantha Ezh Mazha Vidaigal - மாறாத கோபத்தையுடைய ஏழு இளங்காளைகளை
அடர்த்த மாலது இடம், Adartha Maalathu Idam - வென்றொழித்த பெருமானுடைய இருப்பிடமாவது;
மன்னு முது நீர், Mannu Muthu Neer - ஒருநாறும் தண்ணீர் வற்றாத ஆழ்ந்த நீர்நிலைகளிலுள்ள
அரவிந்தம் மலர் மேல், Aravindham Malar Mel - தாமரைப் பூக்களிலே
வரி வண்டு இசை பாட, Vari Vandu Isai Paada - வரிவண்டுகள் இசைபாடப் பெற்றதும்,
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும், Punnai Pon Aey Thaathu Uthirkkum - புன்னை மரங்கள் பொன்னிறமான தாதுகளை உதிர்க்கப்பெற்றதுமான