திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1354 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1354பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரதானனான இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்த மாம்படி – பண்ணின உபகாரம் அறியாத பசுக்களை ரஷித்து – நாம் இவனைத் தலை அறுக்கல் ஆகாது -என்று இரங்கி தோள்களைக் கழித்து விட்டான் ஆய்த்து ருத்ரன் விட்டுப் போனதாய்த்து இவனுக்கு இரக்கத்துக்கு அடி – மாறாத இவ் வாதிக்யத்தை உடையவன் வர்த்திக்கிற தேசம் –பரந்த கழனியில் உண்டான எழில் மிக்கு இருந்த –புள்ளம் பூதங்குடி தானே) 7
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி மாரி பழுதா நிரை காத்து சடையானோடே வடல் வாணன் தடந்தோள் துணித்த தலைவனிடம் குடையா வண்டுகள் உண்ணக் கோல நீலம் மட்டுகுக்கும் புடையார் கழனி எழிலாரும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-7
பதவுரை Show / Hide
விலங்கல் குடை ஆ கொண்டு ஏந்தி, Vilangkal Kudai A Kondu Aendhi - (கோவர்த்தன) மலையைக் குடையாகக் கொண்டு தரித்து (- (புள்ளம் பூதங்குடி))
மாரி பழுது ஆ நிரை காத்து, Maari Pazhuthu A Nirai Kaathu - மழை பழுதாம்படி செய்து பசுக்கூட்டங்களை ரக்ஷரித்தருளினவனும்
சடையான் ஓட, Sadayaan Oda - ருத்ரன் (போரில் முதுகு காட்டி) ஓடினபின்
அடல் வாணன் தட தோள், Adal Vaanan Thada Thol - செருச் செய்யவந்த பாணாஸுரனுடைய விசாலமான புஜங்களை
துணித்த தலைவன் இடம், Thuniththa Thalaivan Idam - அறுத்தெறிந்தவனுமான பெருமானுடைய இருப்பிடமாவது;–
வண்டுகள் குடி ஆ உண்ண, Vandugal Kudi A Unna - வண்டுகளானவை கூட்டங் கூட்டமாக விருந்து உண்ணும்படி
கோலம் நிலம் மட்டு உகுக்கும், Kolam Nilam Mattu Ukukkum - அழகிய நீலமலர்கள் தேனைப் பெருக்காநின்ற
புடை ஆர் கழனி எழில் ஆரும், Pudai Ar Kazhani Ezhil Aarum - நாற்புறமும் சூழ்ந்த கழனிகளினால் அழகு வாய்ந்த