திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1355 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1355பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராஜாக்கள் அடைய முடியும்படி – அர்ஜுனனுக்கு சாரத்தியம் பண்ணி-ஈஸ்வர அபிமானியான ருத்ரன் கையில் ப்ரஹ்மா வினுடைய சாபத்தாலே ஒரு காலும் நிறையாது இருக்கிற தலை யோட்டையைத் தன் திரு மேனியில் ஜல பிந்துவாலே நிறைத்த என் ஸ்ரீ ஸ்வாமி வர்த்திக்கிற தேசம்) 8
கறையார் நெடுவேல் மற மன்னர் வீய விசயன் தேர் கடவி இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைந்த வெந்தை விடம் மறையால் முத்தீயை வளர்க்கும் மன்னு புகழால் வண்மையால் பொறையால் மிக்க வந்தணர் வாழ் புள்ளம் பூதங்குடி தானே –5-1-8
பதவுரை Show / Hide
கரை ஆர் நெடு வேல் மறம் மன்னர் வீய, Karai Ar Nedu Vel Maram Mannar Veeya - ரத்தக்கறை மாறதே பொருந்தியிருக்கிற நீண்ட வேற்படையை யுடையவர்களான (துரியோதனாதி) பகை மன்னவர்கள் ஒழியும்படி (- (புள்ளம் பூதங்குடி,))
விசயன் தேர் கடவி, Vichayan Ther Kadavi - அர்ஜுநனுடைய தேரை நடத்தினவனும்,
இறையான் கையில் நிறையாத முண்டம், Iraiyaan Kaiyil Niraiyaadha Mundam - ருத்ரனுடைய கையில் ஒட்டிக்கொண்டதாய் ஒன்றாலும் நிரம்பாதிருந்த கபாலத்தை
நிறைத்த, Niraiththa - (பிச்சையிட்டு) நிறைத்தவனுமான
எந்தை, Endhai - எம்பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாவது
மறையால், Maraiyaal - வேதங்களாலும்
முத்தீ அவை வளர்க்கும் மன்னு புகழால், Muththi Avai Valarkkum Mannu Pugazhaal - நித்யாக்நிஹோத்ரம் செய்வதனாலுண்டான  நிலைநின்ற கீர்த்தியினாலும்
வண்மையால், Vanmaiyaal - ஔதார்யத்தினாலும்
பொறையால், Poraiyaal - பொறுமையினாலும்
மிக்க, Mikka - மேன்மை பெற்ற
அந்தணர், Andhanar - பிராமணர்கள்
வாழ், Vaazh - வாழப்பெற்ற