திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1356 | பெரிய திருமொழி || (5-1–அறிவது) (திருபுள்ளம் பூதங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்கைக்கு அநாதிகாரிகளாய் இருக்கவும் கூடும் -என்று திர்யக் வேஷ பரிக்ரஹம் பண்ணினான் ஆய்த்து – ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே – அசூரர்களோடே கலந்து உரு மாய்ந்து போனத்தை பிரிக்கைக்காக நீரையும் பாலையும் பிரிக்கும் பதார்த்தத்தின் வடிவைக் கொண்டான் ஆய்த்து – பிரத்யுபகார நிரபேஷமாகவும்-உபகரித்த சுத்தியும் ஒரு சுத்தியே – சிலர் அபேஷிக்க அன்றிக்கே தன் பேறாக உபகரித்தான் ஆய்த்து) 9 | துன்னி மண்ணும் விண்ணாடும் தோன்றாது இருளாய் மூடிய நாள்
அன்னமாகி அருமறைகள் அருளிச் செய்த அமலன் இடம்
மின்னு சோதி நவ மணியும் வேயின் முத்தும் சாமரையும்
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும் புள்ளம் பூதங்குடி தானே –5-1-9 | பதவுரை Show / Hideமண்ணும் விண்நாடும் தோன்றாது, Mannum Vinnadum Thondrathu - மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒன்றும் தெரியாதபடி இருள் ஆய் துன்னி மூடிய நாள், Irul Aay Thunni Moodiya Naal - அந்தகாரமேயாய் நெருங்கி மூடிக்கிடந்த வளவிலே அன்னம் ஆகி அருமறைகள் அருளிச்செய்த, Annam Aagi Arumaraigal Arulichcheytha - ஹம்ஸரூபியாய் அவதரித்து அருமையான வேதங்களை மீண்டும் வெளிப்படுத்தியருளின அமலன், Amalan - பவித்திரனான பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாவது மின்னு சோதி நவமணியும், Minnu Sothi Navamaniyum - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய நவரத்நங்களையும் வேயின் முத்தும், Veyin Muthum - மூங்கில் முத்துக்களையும் சாமரையும், Samaraiyum - சாமரங்களையும் பொன்னும், Ponnum - பொன்களையும் பொன்னி கொணர்ந்து அலைக்கும், Ponni Konarnthu Alaikkum - காவேரியானது தள்ளிக் கொண்டுவந்து அலையெறியப் பெற்ற புள்ளம் பூதங்குடி |