திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1359 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நப்பின்னை பிராட்டி ஒருதிக்குமேயாய் வேறு ஒரு ஆஸ்ரயத்தில் கிடவாத படியான அழகை லபித்து பெறாப் பேறு பெற்றானாய் அவன் வர்த்திக்கிற தேசம்) 2 | செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல்
நறும் தண் தீன் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே –5-2-2 | பதவுரை Show / Hideசெறும் திண்திமில் ஏறு, Serum Thinthimil Aeru - மேல் விழுவனவாய் திடமான முசுப்புக்களையுடையனவான ரிஷபங்கள் (- (கூடலூர்)) உடைய, Udaiya - பங்கமடைய, பின்னை பெறு தண் கோலம், Pinnai Peru Than Kolam - நப்பின்னைப் பிராட்டியினுடைய பெறுதற்கு விரும்பத்தகுந்ததான அழகிய திருமேனியை பெற்றார், Petrar - (ஏறுதழுவி) மணஞ் செய்து கொண்ட பெருமானுடைய ஊர், Oor - திவ்யதேசம் (எதுவென்றால்) நறு தண் தீம் தேன் உண்ட வண்டு, Naru Than Theem Then Unda Vandu - மணம்மிக்கதாய் குளிர்ந்ததாய் இனிமையான தேனைப் பருகின வண்டுகள் குறிஞ்சி பாடும், Kurinji Paadum - குறிஞ்சிப் பண்ணைப்பாடப் பெற்ற |