திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1361 | பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தன்னது அல்லாதது ஒன்றை பெற்றால் போலே இருக்கிற பூமிப் பரப்படைய நீர் ஏற்று அச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட என் குல நாதன் ஆனவன் வர்த்திக்கிற தேசம்) 4 | கூறு ஏர் உருவில் குறளாய் நில நீர்
ஏற்றான் எந்தை பெருமானூர் போல்
சேறு ஏர் உழவர் கோதைப் போதூண்
கோல் தேன் முரலும் கூடலூரே –5-2-4 | பதவுரை Show / Hideகூறு ஏர் உருவின், Koora Aer Uruvin - கொண்டாடுவதற்குத் தகுந்த ரூபத்தையுடைய (- (கூடலூர்)) குறள் ஆய், Kural Aay - வாமநமூர்த்தியாகி நிலம் நீரேற்றான், Nilam Neeretraan - பூமிதானம் வாங்கிக்கொண்ட எந்தை பெருமான் ஊர், Endhai Perumaan Oor - எம்பெருமானுடைய திவ்யதேசம்;- சேறு, Seru - சேறுகளிலே ஏர் உழவர், Aer Uzhuvar - ஏர்கட்டி உழுகின்றவர்களது கோதை, Kodai - மயிர்முடியிலே வைக்கப்பட்ட போது, Podhu - பூக்களிலுள்ள தேனை ஊண், Oon - உணவாகவுடைய கோல் தேன், Kol Then - சோலைவண்டுகள் முரலும், Muralum - இசைபாடப்பெற்ற |