திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1362 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1362பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உடம்பிலே புகரைக் கண்ட மேகமானது தன் உடம்பின் மின்னாகக் கொண்டு அதுக்கு அனந்தரமான முழக்கத்தை முழங்கா நிற்கும் ஆய்த்து- நீர் விழுகிற போது இங்கே கண்டு-கார்ய காலத்தில் அங்கே கண்ட ஸ்ரீ வாமனைப் போலே யாய்த்து இவையும்) 5
தொண்டர் பரவச் சுடர் சென்று அணவ அண்டத்து அமரும் அடிகளூர் போல் வண்டல் அலையுள் கெண்டை மிளிரக் கொண்டல் அதிரும் கூடலூரே –5-2-5
பதவுரை Show / Hide
தொண்டர் பரவ, Thondar Parava - ஆச்ரிதர்கள் துதிக்கும்படியாக (- (கூடலூர்.))
சுடர் சென்று அணவ, Sudar Sendru Anava - (திருமேனி) ஸூர்ய மண்டலத்தளவும் போய் ஸ்பர்சிக்க வளர்ந்து
அண்டத்து அமரும் அடிகள், Andaththu Amarum Adigal - ஆகாசாவகாசமுள்ள இடமெல்லாம் வியாபித்த ஸ்வாமியினுடைய
ஊர், Oor - திவ்யதேசம்;
வண்டல் அலையுள், Vandal Alaiyul - வண்டல் பாய்ந்திருப்பதாய் அலைகளையுடைத்தான நீர்நிலங்களிலே
கெண்டை மிளிர, Kendai Milira - கெண்டை மீன்கள் (தமது ஒளியாலே) மின்னாநிற்க (அதைக் கண்டு)
கொண்டல் அதிரும், Kondal Athirum - மேகங்களானவை முழக்கம் செய்யப் பெற்ற