திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1364 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1364பெரிய திருமொழி || (5-2–தாந்தம்) (திரு கூடலூர்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆபத்துக்களைப் போக்கி ரஷிப்பதாக பொருந்தி வர்த்திக்கிற தேசம்) 7
கரும் தண் கடலும் மலையும் உலகும் அருந்தும் அடிகள் அமருமூர் போல் பெரும் த ண் முல்லைப் பிள்ளையோடிக் குருந்தம் தழுவும் கூடலூரே –5-2-7
பதவுரை Show / Hide
கரு தண் கடலும், Karuthu Than Kadhalum - கறுத்துக் குளிர்ந்த கடல்களையும் (- (கூடலூர்))
மலையும், Malaiyum - மலைகளையும்
உலகும், Ulagum - (மற்றும்) லோகங்களையும்
அருந்தும், Arundhum - (பிரளயத்தில்) அமுதுசெய்த
அடிகள், Adigal - ஸ்வாமி
அமரும் ஊர், Amarum Oor - நித்யவாஸம் பண்ணுமிடம்;–
பெரு தண், Peru Than - பெருத்தும் குளிர்ந்துமிருக்கிற
முல்லைப் பிள்ளை, Mullai Pilla - முல்லைக் கொடி
ஓடி, Odi - படர்ந்து
குருந்தம், Kurundham - குருந்தமரத்தை
தழுவும், Thazhuvum - தழுவியிருக்கப்பெற்ற