திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1369 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1369பெரிய திருமொழி || (5-3–வென்றி) (திரு வெள்ளறை) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓர் ஆச்சார்ய அனுவர்த்தனம் பண்ணிக் கேட்க என்றால் இவன் இறாய்க்கும்-என்று இவன் தன்னை தாழ விட்டு ஸ்ரீ ஹயக்ரீவனாய் நின்று யாய்த்து உபதேசித்தது –ஸ்ரீ சாரதியாய் நின்று உபதேசித்தால் போலே யாய்த்து – வேதம் இதிஹாசாதிகள் இவற்றை உண்டாக்கினவனே என் பக்கலிலே கிருபையை பண்ணி யருள வேணும்) 2
வசையில் நான்மறை கெடுத்த அம்மலர் அயற்கு அருளி முன் பரி முகமாய் இசைகொள் வேதநூல் என்று இவை பயந்தவனே எனக்கு அருள் புரியே உயர்கொள் மாதவிப் போதொடு உலாவிய மாருதம் வீதியின் வாய்த் திசை எல்லாம் கமழும் பொழில் சூழ் திரு வெள்ளறை நின்றானே –5-3-2
பதவுரை Show / Hide
உயர்கொள் மாதவி போ தொழு உலாவிய மாருதம், Uyarkol Maathavi Po Thozhu Ulaaviya Maarudham - ஓங்கிவளர்கின்ற குருக்கத்தி மரங்களிலுள்ள புஷ்பங்களோடே அணைந்த காற்றானது (- (திரு வெள்ளறை, நின்றானே!;))
வீதியின் வாய், Veedhiyin Vaai - வீதிகள்தோறும் (வீசும்போது)
திசை எல்லாம் கமழும், Thisai Ellam Kamazhum - திக்குக்களெல்லாம் பரிமளம் பரவப்பெற்றதும்
பொழில் சூழ், Pozhil Soozh - சோலைகள் சூழ்ந்திருக்கப்பெற்றதுமான
முன், Mun - முன்பொருகால்,
வசை இல் நால் மறை கெடுத்த, Vasai Il Naal Marai Kedu - குற்றமற்ற நான்கு வேதங்களையும் போக்கடித்துக் கொண்டு வருந்திநின்ற
அ மலர் அயர்கு, A Malai Ayarku - மலாரில் தோன்றின அப்பிரமனுக்கு
அருளி, Aruli - அருள்புரிந்து
பரி முகம் ஆய், Pari Mugam Aayi - ஹயக்ரிவாவதாரமெடுத்து
இசை கொள் வேத நூல் இவை என்று, Isai Kol Veda Nool Ivai Endru - “ஸ்வரப்ரதானமான வேத சாஸ்த்ரங்கள் இவைகாண்” என்று சொல்லி
பயந்தவனே, Payandhavaney - அவற்றை அவனுக்கு உபதேசித்துத் தந்தவனே!
எனக்கு அருள்புரி, Enakku Arulpuriy - என் மீது கிருபை பண்ண வேணும்